கோவை மாநகராட்சியின் 50 கி. மீ., துர ரோடு நெடுஞ்சாலைத் துறையிடம் விரைவில் ஒப்படைப்பு…!
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் வசம் 3360 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடுகள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த ரோடுகளை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் விட்டு விட்டதாக தெரிகிறது. கடந்த 3 ஆண்டில், 250 கோடி ரூபாய் செலவிட்டும் ரோடு பராமரிப்பு பணி முறையாக நடக்கவில்லை. சுமார் 70 கி.மீ தூரத்திற்கு இன்னும் மண் பாதை இருக்கிறது. சில இடங்களில் ரோடு குறுகலாக 6 முதல் 8 அடி அகலத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. சில இடங்களுக்கு வாகனங்கள் செல்ல…
