போதை ஏறி போச்சு புத்தி மாறி போச்சு…! வட மாநில வாலிபர்கள் ரகளை
மது போதையில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டத்தில் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வந்து தங்கி, குறுந்தொழில் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள பல நிறுவனங்களில் அவர்களுக்கு சனிக்கிழமைகளில் வார சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் சில வடமாநில தொழிலாளர்கள், டாஸ்மாக் கடைகளுக்கு சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறாக தகராறில் ஈடுபடுவது…
