கோவை கலெக்டர் அலுவலகத்தில் பத்திரம் பட்டா கேட்டு குவிந்த மக்கள்…!
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இதில், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், கணபதி மாநகர் வீட்டு உரிமையாளர்கள் நல பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இவர்கள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு வருகை தந்தனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், “நாங்கள் 33 ஆண்டுகளுக்கு முன் இங்கே இடம் வாங்கி இருக்கிறோம். எங்களுக்கு இன்னும் கிரய பத்திரம்…
