குழந்தைக்கு எச்ஐவி பாதிப்பு… பெற்றோர் 8 வது முறையாக புகார்…
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது.
இதில், சூலூர் காட்டம்பட்டி பகுதியை சேர்ந்த 36 வயதான தறி தொழிலாளி மனைவி குழந்தைகளுடன் வந்து புகார் மனு அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: எனக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு என் மனைவிக்கு பிரசவத்தின் போது ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. பெண் குழந்தைக்கு உடல் எடை குறைவாக இருந்தது. இந்த நிலையில சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அப்போது சிகிச்சை அளித்தார்கள்.
ரத்தம் பற்றாக்குறை காரணமாக ரத்தம் செலுத்தினார்கள். சில மாதங்கள் கலந்து உடல்நல குறைவு ஏற்பட்டு மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை சேர்த்தோம் அப்போது, பல்வேறு சோதனைகள் செய்தார்கள் கூடுதலாக எச்ஐவி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குழந்தைக்கு எச்ஐவி நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எச்ஐவி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் எச்ஐவி நோய் பாதிப்பு இல்லை என தெரியவந்தது கடந்த 2018ம் ஆண்டில் குழந்தைக்கு ரத்தம் செலுத்திய பின்னர் உடல் நலன் அதிகம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, இதுவரை பலமுறை நான் இந்த பிரச்சனை தொடர்பாக புகார் மனு கொடுத்து விட்டேன். தொடர்ந்து மருத்துவ சோதனை என காலம் கடத்தி வருகிறார்கள். என்ன காரணத்தினால் குழந்தைக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டது என மருத்துவ குழுவினரால் கண்டறிய முடியவில்லை. கலெக்டர் அலுவலத்தில் நான் இதுவரை 7 முறை மனு அளித்தேன்.
தற்போது 8வது முறையாக வந்திருக்கிறேன். இதுவரை எனது மனுவிற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. என் பிரச்னைக்கு தீர்வும் கிடைக்கவில்லை. குழந்தைக்கு எச்ஐவி எப்படி பரவியது என மருத்துவ துறையால் கண்டறிய முடியவில்லை, எனக்கு நியாயம் தேவை” என்றார்.
கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம், “எங்கள் மருத்துவமனையில் அந்த பெண் குழந்தைக்கு ரத்த சிவப்பு அணு செலுத்தப்பட்டது. இதனால், குழந்தைக்கு எச்ஐவி பரவவில்லை. இதை நாங்கள் மருத்துவ பரிசோதனை மூலமாக உறுதி செய்து விட்டோம். ரத்தம் தானமாக வழங்கிய நபரிடமும் சோதனை செய்யப்பட்டது. அவருக்கு எச்ஐவி பாதிப்பு இல்லை.
இந்த குழந்தைக்கு வேறு எங்காவது சிகிச்சை வழங்கியிருக்கலாம், ஊசி போட்டிருக்கலாம். அந்த மருத்துவ விவரங்கள் எங்களுக்கு தெரியவில்லை” என ஏற்கனவே கூறி விட்டது. எச்ஐவி பாதித்த குழந்தையுடன் தொழிலாளி உதவி, நீதி கேட்டு தொடர்ந்து அலைந்து கொண்டிருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளிடம் மனு அளித்த தொழிலாளி, நான் வேலைக்கு போகாமல் எத்தனை முறை வந்து புகார் தருவது, எப்படியாவது எனக்கு நீதியும், உதவியும் வழங்க வேண்டும் என கண்ணீருடன் புலம்பி சென்றார்.

Quick login and even quicker withdrawals. It is hard to find a platform this reliable these days. Give 55llbetlogin a shot.
Finally found a platform that actually delivers on its promises. The game variety is impressive and I had no issues with my registration. Check out idmuliajitu