கோவையில் தந்தை இறந்தது தெரியாமல் நாள் முழுவதும் தேடிய மகள்…!

கோவை மதுக்கரை சீரபாளையம் அர்ஜூன் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து (53). இவர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 13ம் தேதி காளிமுத்து மனைவி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை காளிமுத்து மற்றும் அவரது மகள் சங்கீதா ஆகியோர் அருகில் இருந்து கவனித்து வந்தனர்.

கடந்த 18ம் தேதி காளிமுத்து மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். அவர் மருத்துவமனை சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து வட்டார்தை

தனது தந்தை இறந்தது தெரியாமல் சங்கீதா வெளியே சென்ற தந்தையை காணவில்லை என அவரை தேடி வந்தார். இதற்கிடையே மருத்துவமனை நிர்வாகம் காளிமுத்து உயிரிழந்தது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவை வைத்து விசாரித்த போது காளிமுத்து தனது குடும்பத்தினரும் வந்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

இதை வைத்து அவரது குடும்பத்தினரை கண்டறிந்த போலீசார் காளிமுத்து இறந்த தகவலை தெரிவித்தனர். மருத்துவமனைக்கு வந்தபோது தந்தை இறந்த தகவல் தெரியாமல் அவரை ஒரு நாள் முழுவதும் மகள் தேடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *