கோவையில் தேர்தல் சோதனை: 10 நாளில் 4.51 கோடி ரூபாய் பறிமுதல்…!

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

மாவட்ட அளவில் நேற்று முதல் இன்று காலை 6 மணி வரை 31.97 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை தெற்கு தொகுதியில் பறக்கும் படையினர் சோதனை செய்த போது பில் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 16 டேபிள் பேன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் மதிப்பு 23 ஆயிரம் ரூபாய், இதனை விற்பனைக்கு கொண்டு செல்வதாக அதனை கொண்டு சென்ற வியாபாரி தெரிவித்தார். இருப்பினும் பில் காட்டி வாங்கி செல்லுமாறு கூறி பறிமுதல் செய்து விட்டனர் .கோவை வடக்கு தொகுதியில் 24 லிட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்ட அளவில் 107 லிட்டர் மது பாட்டில்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை தேர்தல் நடத்தை விதிகள் செயல்பாட்டிற்கு வந்த நாட்களில் இருந்து அதாவது கடந்த 10 நாளில், 4.51 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

741 லிட்டர் மதுபானம், 145 கிலோ கஞ்சா, 737 கிராம் எடையிலான நகை ஆபரண வகையான பொருட்கள், 2583 கிலோ எடையிலான பாத்திரம். எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *