கோவை கல்லூரி கேண்டீன் விடுதிகளில் உணவு மோசம்… நடவடிக்கை எடுப்பதில் உணவு பாதுகாப்புத் துறை அலட்சியம்
கோவை மாவட்டத்தில் கல்லூரிகள் அதிகமாக இருக்கிறது. கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் தங்கும் விடுதிகள் செயல்படுகிறது.
இதில் கேண்டின் அமைக்கப்பட்டிருக்கிறது. தினமும் பல ஆயிரம் பேருக்கு உணவு தயார் செய்யப்படுகிறது.
இந்த கேண்டின்களில் தயாரிக்கப்படும் உணவுகளில் புழு, பூச்சி மற்றும் தர குறைபாடு பிரச்சனை இருப்பதாக அடிக்கடி புகார் வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் உணவு குறைபாடு தொடர்பாக 20க்கும் மேற்பட்ட புகார் தரப்பட்டிருக்கிறது. மாவட்ட அளவில் 16 கல்லூரி கேண்டின்களில் ஆய்வு நடத்தப்பட்டு உணவு பாதுகாப்பு துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது
. கேண்டின் உணவு புழு பூச்சி தொடர்பான வீடியோ பதிவுகள் அடிக்கடி வைரலாகி வருகிறது. பாரதியார் பல்கலைகழக கேண்டீனிலும் சமீபத்தில் புழு இருந்த வீடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இது தொடர்பாக கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை மந்தமாக
இருப்பதாக தெரிகிறது
பல ஆயிரம் பேர் உணவு சாப்பிட்டும் அந்த விடுதிகளில் சுகாதாரம் மோசமாக இருப்பதாக மாணவ, மாணவிகள் புகார் சொல்லியும் நடவடிக்கை எடுக்க தயங்கும் நிலையிருக்கிறது. மாணவ மாணவிகளுக்கு உடல் நலன் பாதித்தால் கூட உணவு பாதுகாப்பு துறையினர் கண்டு கொள்வதில்லை. மாறாக கல்லூரி நிர்வாகத்திற்கு ஆதரவாக உணவு பாதுகாப்பு துறையினர் பெயருக்கு நோட்டீஸ் தந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக தெரிகிறது.
சாப்பாடு, தண்ணீர் நன்றாக இருக்கிறது. சுத்தமாக பராமரிக்கிறார்கள். சுத்திரிக்காய், பீன்ஸ், காளிபிளவரில் தான் புழு இருக்கிறது. மற்றபடி எந்த பாதிப்பும் இல்லை என கல்லூரி நிர்வாகத்திற்கு ஆதரவாக உணவு பாதுகாப்பு துறையினர் அலட்சியமாக விட்டு விட்டனர். இதனால், பல முறை போராட்டம் நடத்திய மாணவ மாணவிகள் வேறு வழியில்லை, புழு பூச்சி சாப்பாடு சாப்பிடுகிறோம் என விரக்தி நிலைக்கு வந்து விட்டார்கள்.
கல்லூரியில் கல்வி கட்டணத்தை விட உணவு கட்டணம் அதிகம். பல்வேறு மாநிலம், மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கோவையில் உள்ள கல்லூரிகளில் தங்கி படிக்கிறார்கள். இவர்களின் உணவு தரத்தை உறுசி செய்ய மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என மாணவ மாணவிகள் எதிர்பார்த்துள்ளனர்.

I love how quick the withdrawals are. No more waiting for days to get my winnings. yasspin is definitely a winner in my book.