கோவையில் கைதி தப்பி ஓட்டம் பரபரப்பு பின்னணி
கோவையில் மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் சென்றபோது கைதி தப்பி ஓடினார்.இது தொடர்பாக 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் ராகவன் (எ) கோழிக்காரன் (25). இவர் மீது பல்வேறு
மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை வழக்குகள் உள்ளது. ஈரோட்டில் ஒரு திருட்டு வழக்கில் போலீசார் ராகவனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே பெங்களூரில் ஒரு திருட்டு வழக்கில் கர்நாடகா போலீசார் ராகவனை தேடி வந்தனர்.
அப்போது ராகவன் கோவை மத்திய சிறையில் இருப்பது கர்நாடகா போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கர்நாடகா போலீசார் கடந்த ஜூன் மாதம் கோளைக்கு வந்து அவரை கைது செய்து, கர்நாடகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேனில் அழைத்து சென்றனர். வேன் சத்தியமங்கலம் ரோட்டில் அன்னூர் அருகே சென்றுகொண்டிருந்தது.
அப்போது ராகவன் சிறுநீர் கழிக்க வேண்டும் என போளீசாரிடம் கூறியுள்ளார். போலீசார் அவரை வேனில் இருந்து இறங்கி சிறுநீர் கழிக்க அழைத்து சென்றனர். அப்போது ராகவன் திடீரென போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி இருட்டில் ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கர்நாடகா போலீசார் அவரை துரத்தி சென்றனர். ஆனால் ராகவன் தப்பிவிட்டார். இது குறித்து கர்நாடகா போலீசார் அன்னூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்
பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒப்பி ஓடிய ராகவனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் தப்பி ஓடிய ராகவன் பவானியில் பதுங்கி இருந்தது போவீசாருக்கு தெரியவந்தகுடமனே அன்னூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ அப்துல் முத்தலீப், போலீஸ்காரர் ரஞ்சித் மற்றும் ஆயுதப்படை
போலீசார் தினேஷ், கார்த்திக் ஆகியோர் விரைந்து சென்று பவானியில் பதுங்கி இருந்த ராகவனை மடக்கி
பிடித்து நேற்று இரவு 11 மணியளவில் கோவைக்கு அழைத்து வந்தனர். கோவை விரைவு
நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் ராகவனை சிறையில் அடைக்க நள்ளிரவு 1 மணியளிவில் அழைத்து சென்றனர். நஞ்சப்பா சாலையில் உள்ள சிறை கேட் வழியாக உள்ளே அழைத்து சென்றனர். இதற்காக போலீசார், ராகவனின் கைவிலங்கை அகற்றினர்.
இதனை பயன்படுத்திக்கொண்ட ராகவன், போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். போலீசார் அவரை சிறை வளாகத்திற்குள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனை எதிர்பாராத போலீசார் உடனடியாக சிறை போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உயர் அதிகாரிகள் உடனே ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தினர். இதையடுத்து எஸ்ஐ அப்துல் முத்தலீப் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.
ரேஸ்கோர்ஸ் போலீசார் உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்து அனைத்து பகுதி போலீசாரையும் உஷார்படுத்தினர். சம்பவ இடத்திலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.ஆனால் ராகவன் சிக்கவில்லை. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் கைதி தப்பி ஓடியதாக மீண்டும் ஒரு வழக்குப்பதிவு செய்து ராகவனை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட எஸ்ஐ அப்துல் முத்தலீப் போலீஸ்காரர் ரஞ்சித் மற்றும் ஆயுதப்படை போலீசார் தினேஷ், கார்த்திக் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

The app is surprisingly lightweight and doesn’t drain my battery. I love how easy it is to navigate through the different sections. A must-have for mobile users. Try bossjiliapp.