கோவை மாநகராட்சி பூங்கா மைதானங்கள் பராமரிப்பதில் அலட்சியம்

கோவை மாநகராட்சியில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பூங்கா, சிறுவர் பூங்கா,

விளையாட்டு மைதானங்கள் இருக்கிறது. இவற்றை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை.

ஆண்டிற்கு ஒரு முறை பூங்கா பராமரிப்பிற்கு டெண்டர் விடப்பட்டு பராமரிப்பு பணி செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், பூங்காக்களில் நாற்காலிகள், செடி, மரங்கள் நல்ல முறையில் பராமரிக்கப்படுவதில்லை தண்ணீர் ஊற்றாமல் பல பூங்காக்களில் புற்கள் காய்ந்து போய் கிடக்கிறது. பூங்கா பராமரிப்பு பணி செய்யும் ஒப்பந்த நிறுவனத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாநகராட்சி நிர்வாகம் இருப்பதாக தெரிகிறது.

இதே போல், விளையாட்டு மைதானங்கள், பள்ளி மைதானங்கள் பராமரிப்பிலும் அவலமான நிலைமை காணப்படுகிறது. பள்ளி வளாகங்களில் குப்பை கழிவுகள் கிடப்பதாக தெரிகிறது.

மாணவ, மாணவிகள் விளையாட முடியாமல் தவித்து வருகின்றனர். பூங்காக்களில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் குடிநீர், கழிவறை வசதி தேவை. வாக்கிங் செல்ல தளம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 thoughts on “கோவை மாநகராட்சி பூங்கா மைதானங்கள் பராமரிப்பதில் அலட்சியம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *