கோவை மாவட்டத்தில் பேரூராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை. ..

கோவை மாவட்டத்தில் அம்ரித் 2.0 திட்டத்தில் கடந்த 3 ஆண்டிற்கு முன் குடிநீர் திட்ட பணிகள் நடத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

செட்டிபாளையம், இருகூர், கண்ணம்பாளையம், 4 வீரபாண்டி, ஒத்தக்கால் மண்டபம், பள்ளபாளையம், பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை, வெள்ளலூர், ஆனைமலை, கோட்டூர் என 11 பேரூராட்சிகளில் குடிநீர் கூடுதலாக வழங்க திட்டமிடப்பட்டது. ஆனைமலை பேரூராட்சிக்கு ஆழியாறு திட்டத்திலும், கோட்டூர் பேரூராட்சிக்கு அம்பராம்பாளையம், தேவி பட்டணம், ஆழியாறு திட்டத்தின் மூலமாகவும் குடிநீர் பெறப்படுகிறது.

சிறுமுகை பேரூராட்சிக்கு பவானி ஆற்றிலும், இதர பேரூராட்சிகளுக்கு பில்லூர் முதல் மற்றும் 2வது திட்டத்தின் மூலமாக குடிநீர் பெற வழிவகை செய்யப்பட்டது. இந்த பேரூராட்சிகளில் கூடுதல் குடிநீருக்காக 53 இடங்களில் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளும், சுமார் 60 ஆயிரம் வீட்டு குடிநீர் இணைப்புகளும் வழங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கூடுதலாக தினமும் 3 கோடி லிட்டர் குடிநீர் பெற முடியும் என தெரிவித்தும் கூடுதல் குடிநீர் கிடைக்கவில்லை.

நீர் ஆதாரங்களில் போதுமான குடிநீர் இல்லாமல் குடிநீர் சப்ளை குறைவாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் பேரூராட்சிகளுக்கு உரிய அளவில் குடிநீர் வழங்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

One thought on “கோவை மாவட்டத்தில் பேரூராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை. ..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *