கோவை மாவட்டத்தில் 201 வேட்பு மனுக்கள் ஏற்பு: 249 மனுக்கள் நிராகரிப்பு…!
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் 5 நாட்களாக நடந்தது.
இதில் மேட்டுப்பாளையத்தில் 48 பேரும், சூலூரில் 32 பேரும், கவுண்டம்பாளையத்தில் 33 பேரும், கோவை வடக்கில் 49 பேரும், தொண்டாமுத்துாரில் உச்சபட்சமாக 77 பேரும், கோவை தெற்கில் 61 பேரும். சிங்காநல்லலூரில் 44 பேரும்,
கிணத்துக்கடவில் 43 பேரும், பொள்ளாச்சியில் 34 பேரும், வால்பாறையில் 29 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாவட்ட அளவில் 450 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில் மேட்டுப்பாளையத்தில் 24 மனுக்கள் ஏற்கப்பட்டது. சூலூரில் 17 வேட்பு மனுக்களும் கவுண்டம்பாளையத்தில் 17 மனுக்களும், கோவை வடக்கில் 29 மனுக்களும் தொண்டாமுத்தாரில் 22 மனுக்களும், கோவை தெற்கில் 38 மனுக்களும், சிங்காநல்லூரில் 29 மனுக்களும், கிணத்துக்கடவில் 5 மனுக்களும்,
பொள்ளாச்சியில் 14 மனுக்களும், வால்பாறையில் 6 மனுக்களும் பரிசீலனையின் போது இறுதி செய்யப்பட்டது.
மாவட்ட அளவில் 201 மனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் பிரிவினர் அறிவித்தனர். இதில் 249 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. சில வேட்பாளர்கள் 2 முதல் 4 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
கட்சியினர் மாற்று வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்பு மனுக்கள் தானாக நிராகரிப்பு செய்யப்பட்டன. சரியான முறையில் பூர்த்தி செய்யாத, தகவல் தவறாக பூர்த்தி செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
நாளை முதல் வரும் ஒன்பதாம் தேதி வரை வாபஸ் வாங்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் வாபஸ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
