கோவை நகரில் 46680 சீமை கருவேல மரங்களை வெட்ட உத்தரவு…

கோவை மாநகராட்சி எல்லையில் 5 மண்டலங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், குளம், வாய்க்கால், சாலைப்பகுதிகள், அரசுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, பொது ஏலம் மற்றும் டெண்டர் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ளது.

கிழக்கு மண்டலத்தில் 5 இன்ச் தடிமனில் 3898 மரங்கள், அதற்கு மேல் 5098 மரங்கள் மேற்கு மண்டலத்தில் 5 இன்ச் தடிமனில் 2945 மரங்கள், அதற்கு மேல் 4417 மரங்கள், தெற்கு மண்டலத்தில் 5 இன்ச் அளவில் 7363 மரங்கள், அதற்கு மேல் தடிமனில் 11171 மரங்கள், வடக்கு மண்டலத்தில் 5 இன்ச் தடிமனில் 2914 மரங்கள்.

அதற்கும் மேல் 4372 மரங்கள், மத்திய மண்டலத்தில் 5 இன்ச் மரங்கள் 1429 அதற்கு மேல் 4372 மரங்கள் என 5 மண்டலங்களிலும் 5 இன்ச் தடிமன் அளவில் 18049 மற்றும் அதற்கு மேல் தடிமனில் 28631 மரங்கள் என மொத்தம் 46680 மரங்கள் இருப்பதாக தெரியவந்தது.

இதில், 5 இன்ச் தடிமனில் 451 டன் எடையிலும், அதற்கு மேல் 572 டன் அளவிலும் மொத்தம் 1023 டன் எடையில் மரங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. ஏலதாரர், ஏலத் தொகையை முழுவதுமாக செலுத்தி பணி உத்தரவு பெற்றுக் கொள்ள வேண்டும். மரங்களை மெசினில் முறையில் வேரோடு அகற்றி, அவை மீண்டும் தழைத்து வளராதவாறு உறுதி செய்ய வேண்டும்.

வேரோடு அகற்றிய பின்னர் கிடைக்கும் மரக்கட்டைகளை துண்டுகளாக வெட்ட வேண்டும். மீதமுள்ள முட்கள் மற்றும் சிறு குச்சிகளை அப்படியே விட்டுவிட வேண்டும். குறிப்பிட்ட நிலம் அல்லது பகுதியில் உள்ள மரங்களை மட்டுமே வெட்ட வேண்டும்.

பாதுகாக்கப்பட வேண்டிய பிற மரங்கள் அல்லது தாவரங்கள் இருந்தால், அவை முதலில் முறையான புவியிடக் குறியீட்டுடன் அடையாளப்படுத்தப்பட வேண்டும். அனுமதியின்றி வேறு எந்த மரத்தையாவது அல்லது தாவர இனத்தையாவது வெட்டும் ஏலதாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

2 thoughts on “கோவை நகரில் 46680 சீமை கருவேல மரங்களை வெட்ட உத்தரவு…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *