தொழிற்சாலைகளில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு…
கோவை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.
டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பாக தொழிற்சாலைகள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர்கள் சரவணன், வினோத்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளில் காய்ச்சலை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதன்படி, டிரம்கள், வாளிகள், தட்டுகள், டயர்கள், டின்கள் மற்றும் கொள்கலன்களில் உள்ள தண்ணீரை அகற்ற வேண்டும்.
தண்ணீர் தொட்டிகளை இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். மேற்கூரை வடிகால்கள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் சம்புகளை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். வளாகத்தை சுற்றி முறையான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
வாரந்தோறும் கொசு உற்பத்தி இடங்களை ஆய்வு செய்வதுடன், குறிப்பாக கட்டுமான பகுதிகள், வாகன நிறுத்தமிடங்கள் மற்றும் தோட்டங்களில் கவனம் செலுத்தி, தண்ணிர் தேங்கியிருந்தால் உடனடியாக அகற்றப்பட வேண்டும். மழைநீர் தேங்கக்கூடிய காலி டப்பாக்கள், டயர்கள், பாட்டில்கள் அகற்றப்பட வேண்டும்.
தண்ணீர் வடியவைக்க முடியாத நிலையில், அதில் கொசுப்புழு ஒழிப்பு மருந்தை பயன்படுத்த வேண்டும். செடி கொடிகளை ஒழுங்காக வெட்டி பராமரிப்பது அதிக ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசுக்கடியில் இருந்து ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் கொசு விரட்டிகளை வழங்க வேண்டும்.
ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் கொசு வலைகளை பயன்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் குறித்து ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுக அறிவுறுத்த வேண்டும். டெங்கு தடுப்புக்குழு அமைக்கப்பட வேண்டும் அல்லது தொழில்சார் சுகாதார பிரதிநிதியை நியமிக்க வேண்டும். இதன் மூலம் ஆய்வு சரிபார்ப்பு பட்டியலை பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Finally found a platform that doesn’t lag during peak hours. The game variety is impressive and the customer support is actually helpful. pk68vippk is definitely my new go-to.
Love the atmosphere and the way the promotions are set up. It feels like they actually care about the players. xbajeecasino is top notch.