மனைவி பாசத்தால் போலீசில் சிக்கிய கோவை கைதி…

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் ராகவன் (26).

இவர் மீது பல்வேறு மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, அடித்தடி என பல வழக்குகள் உள்ள இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ராகவனை திருட்டு வழக்கில் கர்நாடகா போலீசார் கோவை சிறை இருந்து பெங்களூரூ அழைத்து சென்ற போது அன்னூர் அருகே தப்பினர். இதுகுறித்து அன்னூர் போலீசா வழக்கு பதிவு செய்து கடந்த 30ம் தேதி தப்பி ஓடிய ராகவனை பவானியில் வைத்து கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, அவரை போலீசார் நள்ளிரவு 1 மணியளிவில் மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்ற போது மீண்டும் போலீசாரிடம் இருந்து தப்பினார்.

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாவட்ட போலீ அடங்கிய 3 தனிப்படை அமைத்து ராகவனை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அவர் பவானி வனப்பகுதியில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று ராகவனை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் அன்னூர் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார். பின்னர் நேற்று அதிகானண மணியளவில் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த நிலையில் ராகவன் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிறை வளாகத்தில் இருந்து தப்பிய ராகவனை பிடிக்க தனிப்படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது அப்போது ராகவன் இலங்கை அகதிகள் முகாமிற்கு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீச திருச்சி, மதுரை, ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் முகாமை தனிப்படை போலீசார் கண்காணித்து கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில், மனைவி மீது அதிக பாசம் காரணமாக ராகவன், அவரை பார்க்க முகாயிற்கு வர திட்டமிட்டுள்ளார். அதற்காக முகாம் அருகே உள்ள வனப்பகுதிக்கு வந்து கடந்த 2 நாட்களாக உணவு, தண்ணீர் எதுவும் இன்றி பதுங்கி உள்ளார். தொடர்ந்து மனைவி, குழந்தைகளை பார்த்து விட்டு இலங்கை தப்பி செல்லவும் திட்டம் தீட்டி உள்ளார். இதற்காக தனது உறவினர் ஒருவரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், அதற்குள் தனிப்படையினர் ராகவனை கையும் களவுமாக மடக்கி பிடித்து விட்டனர். தொடர்ந்து அவர் கோவை அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

One thought on “மனைவி பாசத்தால் போலீசில் சிக்கிய கோவை கைதி…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *