தவெக லிஸ்டிலேயே இல்லையேப்பா…

கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியில் வெளியிடும் முன்னர் அரசியல் கட்சியினர் ஆலோசனை பெறப்பட்டது. மேலும் சிறப்பு முகாம் மற்றும் இறந்தவர்கள் பெயர் நீக்கம் தொடர்பாக நடந்த ஆய்வு கூட்டத்திலும் 12 அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆனால் கோவை மாவட்டத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் எந்த கூட்டத்திலும் பங்கேற்கவில்லையாம். குறிப்பாக பூத் லெவல் ஏஜென்ட் 1, பூத் லெவல் ஏஜென்ட் 2 பட்டியலில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் பெயர் இடம்பெறவில்லை. மாவட்டத்தில் 3117 ஓட்டு சாவடிகள் இருக்கிறது. இந்த ஓட்டு சாவடிகளுக்கு தமிழக வெற்றி கழகத்தின் பூத் ஏஜென்ட்கள் இல்லாமல் இருப்பதாக தெரிகிறது. தலைவர் கவனித்து இந்த பிரச்சினையை சரி செய்வார் என கழகத் தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *