உணவு நிறுவனங்களின் தரம் தொடர்பாக ஆய்வு

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை 3 மாதங்களுக்கு உணவகங்கள் மற்றும் அனைத்து உணவு விற்பனை நிறுவனங்களிலும் சிறப்பு ஆய்வு நடத்த மாநில உணவு பாதுகாப்பு கமிஷனர் உத்தரவிட்டு இருந்தார்.

இதையடுத்து, கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையில் அலுவலர்களை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் உணவு சேவை நிறுவனங்களில் இன்று முதல் தங்களின் ஆய்வு பணியை துவங்கினர்.

இவர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்கள். உணவு விற்பனை நிலையங்கள், கிளப்புகள், உணவு கூடங்கள், உணவு வழங்குநர்கள் சாலையோர விற்பனையாளர்கள், சிற்றுண்டி விற்பனையாளர்கள், தேநீர் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். மாவட்டம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் உணவு சேவை நிறுவனங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்

இந்த ஆய்வின் போது எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. சான்றிதழ் பதிவு, சமையலறை, உணவு சேமிப்பு கிடங்கு தூய்மையாக இருப்பதையும், பயன்படுத்திய எண்ணெய் ரூகோ சேகரிப்பாளர்களிடம் வழங்கிய பதிவுகள் அபாய மதிப்பீட்டின் அடிப்படையில் உணவு மற்றும் நீரில் தொடர்புடைய வேதியியல்

நுண்ணுயிரியல் மாசுக்கள் பரிசோதனை செய்தல், பூச்சி கட்டுப்பாட்டு நடவடிக்கை, உணவு தரம், கொள்முதல் முதல் பரிமாறுதல் வரையிலான நடவடிக்கை பணியாளர்கள் கை கழுவுதல், சுத்தமான மேலங்கி, கையுறை, தலைக்கவசம், முகக்கவசம் அணிதல் போன்றவைகளையும், உணவு கையாளுபவர்கள் மருத்துவ சான்றிதழ் போன்றவற்றை ஆய்வு செய்கின்றனர்.

மேலும், பொதுமக்கள் உணவு தொடர்பான புகார்களுக்கு 94435 20332 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உணவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், “இந்த ஆய்வு பணியானது நவம்பர் 30ம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது. மக்களுக்கு தரமான உணவு பொருட்களை பயன்படுத்தி கொடுப்பதை உறுதி |செய்யும் வகையில் ஆய்வு நடக்கிறது. ஆய்வின் போது வீதிமிறல் கண்டறியப்பட்டால் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

சுத்தம் சுகாதாரம் இல்லையென்றால் ரூ.10 ஆயிரம் அபராதமும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், ஸ்பூன் மற்றும் மயோனைஸ் ஆகியவைக்கு ரூ.5 ஆயிரம், எப்எஸ்எஸ்ஏஐ உரிமம் இல்லையென்றால் ரூ.10 ஆயிரம், தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தால் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையும் அபராதம் விதிக்கப்படும். தவிர, நோட்டீஸ் அளிப்பது, உரிமம் ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது. நேற்று முதல் நாள் ஆய்வில் 38 நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு மூன்று நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. பிளாஸ்டிக் கப் பயன்படுத்தியவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *