கோவையில் 5 கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை

தமிழகம் முழுவதும் உள்ள 52 கோயில்களில் செல்போன் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. கோவை மாவட்டத்தில் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் பேரூர் பட்டீசுவரர் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில், ஈச்சனாரியில் உள்ள விநாயகர் கோயில் ஆகிய கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்க கோயில் நுழைவு வாயில் பகுதியில் வைக்கும் வகையில் செல்போன் பாதுகாப்பு பெட்டக வசதியுடன்கூடிய அறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இங்கு பக்தர்கள் ஒரு செல்போனிற்கு ரூ.5 கட்டணமாக செலுத்தி, செல்போன்களை கொடுத்துசெல்ல வேண்டும். அங்கு,

பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. சாமி திரிசனம் முடிந்து வெளியே வரும்போது டோக்கனைதிரும்ப செலுத்தி, செல்போன்களை வாங்கிச்செல்லாம்.

மருதமலை கோயிலில் படிப்பாதை வழியாக செல்லும் பக்தர்களின் வசதிக்காக அடிவாரத்திலும், மலைமேல் பகுதியிலும் செல்போன் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 5 கோயில்களில் பக்கர்கள் செல்போன் பயன்படுத்துவதை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனை மீறி கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன்களை எடுத்துச்சென்றால் அதனை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும்.

எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்கள் அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

One thought on “கோவையில் 5 கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *