கோவையில் பறக்கும் படை சோதனை: 10.50 லட்ச ரூபாய் பறிமுதல்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

ப்ரூக்பான்ட் ரோடு பகுதியில் பறக்கும் படையினர் சோதனை நடத்தியபோது சரக்கு வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த ரசீது என்ற வாலிபரிடம் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.

அப்போது அவர் தனது பேக்கில் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தார். இந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் இதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல் சுங்கம் பகுதியில் இன்னொரு பறக்கும் படையினர் சோதனையிட்ட போது ஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட
மூன்று லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை ராம்நகர் சாஸ்திரி வீதி பகுதியில் பறக்கும் படை சோதனையில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நாமினேஷன் துவங்கும் முன்பே பறக்கும் படை தொடர்ந்து சோதனை செய்வதால் பொதுமக்கள் தரப்பிலிருந்து பல்வேறு தேவைகளுக்காக கொண்டு செல்லப்படும் பணம் ஆவணங்கள் இல்லாத காரணங்களால் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *