கோவை மாவட்டத்தில் சீனியர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக தபால் ஓட்டு சீட்டு விண்ணப்பம் வந்தாச்சு..

கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தபால் ஓட்டு சீட்டு விண்ணப்ப படிவங்கள்..

இந்தியத் தேர்தல் ஆணையத்தால், சட்டமன்ற பொதுத் தேர்தல், 2026 அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட
10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள

40% மேற்பட்ட மூலம் உள்ள மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதில் ஏற்படும் சிரமத்தினைத் தவிர்க்கும் பொருட்டு, தபால் ஓட்டு போட
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனானி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விருப்பத்தினைப் பெற ஏதுவாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth lever Officer), படிவம் 12D மற்றும் வாக்காளர் பட்டியலுடன் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு நேரில் வருகை தருவார்கள்

தபால் ஓட்டு சீட்டு விண்ணப்ப படிவங்களுடன் அலுவலர்கள் வருகை தரும் போது உரிய படிவத்தில் தங்களது விருப்பத்தினை படித்துப் பார்த்தும், படிக்கக் கேட்டும், ஆதாரங்கள் ஏதும் கோரும் பட்சத்தில் அதன் நகலினை சமர்ப்பித்து, ஒப்பம் செய்து தங்களது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் ஓட்டு தொடர்பான, தங்களது விருப்பத்தினை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவோ

அல்லது தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கோ நேரில் சென்று 03.04.2026-க்குள் படிவம் 12D-யினை, இதற்காக பிரத்யேகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் உரிய ஒப்பம் செய்து சமர்ப்பிக்கலாம் .


தபால் ஓட்டு போட விருப்பமில்லாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு நாளில் நேரில் ஓட்டு சாவடி சென்று தங்களது ஓட்டுக்களை பதிவு செய்யலாம் என மாவட்ட தேர்தல் பிரிவு தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தல் பணியில் உள்ள அரசு அலுவலர்கள் 70 ஆயிரம் பேருக்கு மேல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இவர்கள் தபால் ஓட்டு போட கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு தபால் ஓட்டு சீட்டு விண்ணப்ப படிவம் வந்துள்ளது. இதுவரை 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தபால் ஓட்டு சீட்டு விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டிருக்கிறது.

விரைவில் இந்த தபால் ஓட்டு சீட்டு விண்ணப்ப படிவங்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் ஒப்படைக்கப்படும் என தேர்தல் பிரிவினை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *