கோவையில் வாக்கு எண்ணிக்கை மையம் தயார்

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது.

இதில் மாவட்ட அளவில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி ஓட்டு பதிவு நடக்கவுள்ளது. இந்த நிலையில், மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஓட்டு எண்ணிக்கை நடத்தும் வகையில் ஒட்டு எண்ணிக்கை மையம் (கவுண்டிங் சென்டர்) தயார் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) ஓட்டு எண்ணிக்கை மையம் தயார் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. ஒரு தொகுதிக்கு ஒரு இடத்தில் என மொத்தம் 10 எண்ணிக்கை மையம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதற்கு அருகே 10 இடங்களில் பாதுகாப்பு அறை (ஸ்ட்ராங்க் ரூம்) அமைக்கும் பணி நடக்கிறது. எண்ணிக்கை மையத்தில் 15 முதல் 22 ரவுண்ட் டேபிள் அமைக்க மின் விளக்கு மற்றும் பிளக் பாயிண்ட் வசதிகளுடன் தடுப்பு பகுதிகள், கண்காணிப்பு கேமரா குடிநீர், கழிவறை வசதிகள் அமைக்கும் பணி நடக்கிறது.

எண்ணிக்கை மையம், ஸ்டிராங்க் ரூம் தொடர்பான விவரங்கள் வரைப்படங்கள் தயாரித்து அதை அந்த வளாகத்தின் முன் ஒட்டி வைக்கும் பணியும் நடக்கிறது. ஒட்டு எண்ணிக்கை மையங்கள் கடந்த காலங்களில் இருந்ததை போல் அமைக்கப்படவுள்ளது.

வேட்பாளர்கள், ஏஜன்டுகள் ஓட்டு மெசின்கள் உள்ள அறைகளை கண்காணிப்பு கேமராவில் பார்க்க வசதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் எலி தொல்லை, மின் தடையால் ஓட்டு மெசின் அறைகள் கண்காணிப்பு காட்சிகளை சில நிமிட நேரம் பார்க்க முடியாக சூழல் இருந்தது.

தற்போது அதுபோன்ற சூழல் ஏற்படாமல் இருக்க தேவையான வசதிகள் செய்யப்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர். ஓட்டு பதிவு முடிந்த பின்னர், மெசின்களை பாதுகாப்பாக அதிக நாட்கள் வைத்திருக்க வேண்டிய நிலையிருக்காது. இருந்தாலும் கூடுதல் திட்டங்களை மேற்கொள்ள தேர்தல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் பிரிவினர் கூறுகையில், “ஏற்கனவே வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட கேமராக்கள் இருக்கிறது. மெசின்களை கண்காணிக்க, கவுண்டர் சென்டர் பகுதியில் 200 கேமராக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. கவுண்டர் சென்டர் முழுவதும் இரும்பு கிரில் போட்டு அடைக்கப்பட்டுள்ளது. பாஸ் வைத்துள்ள ஏஜன்ட் மட்டுமே அனுமதிக்கப்படுவர் கல்லூரி வளாகத்தில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருக்கிறது, “என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *