கோவை மாவட்டத்தில் மகளிர், யூத், மாடல், பசுமை ஓட்டுச்சாவடிகள்…!
கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்ட மன்ற தொகுதிளில் 1,065 வளாகங்களில் 3,563 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 31 ஓட்டு சாவடிகள் பூஜ்ஜிய நிலையில் இருக்கும் இங்கே ஓட்டு பதிவு நடக்காது, 3342 ஒட்டு சாவடிகளில் ஓட்டு பதிவு நடத்தப்படும். எஸ்ஐஆர் பணிக்கு முன் கூடுதல் ஓட்டு சாவடிகள் இருந்தது. இதை நீக்கம் செய்யாமல் பூஜ்ஜிய நிலை எனப்படும் செயல்பாடு நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டது.
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் 360 ஓட்டு சாவடிகள், சூலூரில் 305, கவுண்டம்பாளையம் 547, கோவை வடக்கில் 339, தொண்டாமுத்தூரில் 371, கோவை தெற்கு 283, சிங்காநல்லூரில் 358 கிணத்துக்கடவில் 377, பொள்ளாச்சியில் 281, வால்பாறையில் 262 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்ற தொகுதியிலும் தலா ஒரு மாதிரி வாக்குச்சாவடி மையம், ஒரு மகளிர் வாக்குச்சாவடி மையம் ஒரு யூத் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்டம் முழுவதும் 18 இடங்களில் பாமை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது.
வாக்காளர்களை கவரும் வகையில் ஒரு சட்ட மன்ற தொகுதிக்கு ஒரு மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடிகள் வண்ண திரைச்சீலைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. பலூன் மலர் அலங்காரங்கள் நுழைவு வாயில் பகுதியில் வாழை தோரணங்கள் என அமர்க்கப்படுத்தப்பட்டுள்ளது மகளிர் வாக்குச்சாவடியில் பணி புரியும் ஊழியர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் என அனைவரும் பெண்களாக இருப்பார்கள்.
இந்த வாக்குச்சாவடிகள் பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் வகையில் பிங்க் நிற திரைச்சீலைகள், அலங்கார பலூன்கள் அமைக்கப்பட்டது. இதேபோன்று 10 யூத் வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு 25 வயதிற்கு உட்பட்ட ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் 18 இடங்களில் பசுமை வாக்குச்சாவடிகளில்
தென்னை மர ஓலைகளால் பந்தல் அமைக்கப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாடுகள் தவிர்க்கப்பட்டு இயற்கை பொருட்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. அலங்காரங்கள், சிறுவர்கள் விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டது.
கோவை தெற்கு தொகுதியில் ராம்நகர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிங்காநல்லூர் தொகுதியில் பீளமேடு பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி வாக்குச்சாவடி கிணத்துக்கடவு தொகுதியில் மதுக்கரை மார்க்கெட் அரசு மேல்நிலைப்பள்ளியில்
மாடல் மற்றும் பெண்கள், யூத் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது பொள்ளாச்சி தொகுதியில் 6 இடங்களிலும், கிணத்துக்கடவு தொகுதியில் 4 இடங்களிலும் தொண்டாமுத்தூரில் இரு இடங்களிலும், மேட்டுப்பாளையம், சூலூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, வால்பாறை கவுண்டம்பாளையம் தொகுதியில் தலா ஒரு இடத்திலும் என 18 இடங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பசுமை வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
