கோவை ஜி. எச் எக்ஸ்ரே பிரிவு ஏக மோசம்

கோவை அரசு மருத்துவமனையின் எம்எம் பிளாக்கில் எக்ஸ்ரே பிரிவு உள்ளது.இந்த

பகுதியில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இங்கே எக்ஸ்ரே பிலிம் மற்றும் ஆவணங்கள் பராமரிப்பு பகுதி பழுதடைந்து காணப்படுகிறது. இந்த பகுதியை புதுப்பித்து தர வேண்டும். பொதுமக்கள் நோயாளிகள் உட்காருவதற்கு போதுமான நாற்காலிகள் அமைக்கப்படவில்லை.மேலும் எக்ஸ்ரே எடுக்க நோயாளிகளை வீல் சேர் மற்றும் ஸ்ட்ரெச்சரில் அலைத்து சென்று வருவதற்கும் இந்த பகுதியில் இடையூறு இருக்கிறது.எனவே

புதிய வார்டு அல்லது நோயாளிகள் தொந்தரவு இல்லாத பகுதியில் எக்ஸ்ரே பிரிவு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *