மண்டை மீது விழுமோ மரம், ஜி. எச் முன் மக்கள் அச்சம்

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரிய புங்கன் மரங்கள் இருக்கிறது குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவு

முன்பு இருந்த மரம் கீழே விழும் அபாயத்திலிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த மரத்தின் கிளைகள் சமீபத்தில் வெட்டி அகற்றப்பட்டது. இதேபோல் மற்றொரு நுழைவு வாயில் பகுதியில் புங்கன் மரம் இருக்கிறது.

இந்த மரம் சாய்ந்து விழும் நிலையில் இருக்கிறது. மரத்தின் பாதி பகுதி காய்ந்து விட்டது. இது உடைந்து விழும் அபாயம் இருக்கிறது. சமீபத்தில் ஒரு கிளை விழுந்து விட்டது. அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இங்கே பெரிய கிளை பகுதி உடைந்து விழுந்தால் ஆபத்து ஏற்படும் என அந்த பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே மர கிளைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *