கவுண்டம்பாளையம், குனியமுத்தூர் பகுதியில் நாளை மின்தடை…
கோவை மின் பகிர்மான வட்டம் செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவை கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை (18ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நல்லாம்பாளையம் ஹவுசிங் யூனிட், ஏஆர் நகர்,தாமரை நகர், ஓட்டுநர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர்,
யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர்,தயாள் வீதி, தீயணைப்பு பகுதி, நல்லாம்பாளையம் ரோடு, டிவிஎஸ் நகர் ரோடு மற்றும் ஜெம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லே அவுட், சபரி கார்டன், ரங்கா லே அவுட், மணியகாரம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
அதேபோல சாய்பாபா காலனிக்கு உட்பட்ட இந்திரா நகர்,காவேரி நகர், ஜீவா நகர்,காமராஜ் வீதி, முழு புதூர் 6வது வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகர், கணபதி லே அவுட், முழு லே அவுட், கிரி நகர், தேவி நகர், அம்மாசை கோனார் வீதி,
கிருஷ்ணம்மாள் வீதி, என்ஜிஆர் வீதி மற்றும் சின்னம்மாள் வீதியின் ஒரு பகுதி ஆகிய இடங்களிலும், இடையர்பாளையம் பகுதிக்கு உட்பட்ட பி அண்டு டி காலனி, இபி காலனி, பூம்புகார் நகர், டிவிஎஸ் நகர், அருண் நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர் மற்றும் தட்சண தோட்டம் ஆகிய இடங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
சேரன் நகர் பகுதியில் ஐடிஐ நகர், தென்றல் நகர்,சரவண நகர், பாலன் நகர்,லட்சுமி நகர், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம், கவுண்டம்பாளையம் மற்றும் லெனின் நகரில் சுப்பாத்தாள் லே அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே அவுட், சம்பத் வீதி,
பெரியார் வீதி, வஉசி வீதி, Cஜி லே அவுட், நெடுஞ்செழியன் வீதி,தெய்வநாயகி நகர், சங்கனூர், புதுத்தோட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் வீதி, கருப்பராயன் கோயிலில் இருந்து தயிர் இட்டேரி ரோடு வரை ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.
குனியமுத்தூர் மின்பகிர்மான வட்டம் செயற் பொறியாளர் (பொறுப்பு) சென்ராம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
குனியமுத்தூர் கோட்டத்திற்குட்பட்ட மதுக்கரை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (18ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கே.ஜி.சாவடி, எம்.ஜி.ஆர்.நகர், பாலத்துறை, சுகுணாபுரம், பைப்பாஸ் ரோடு, பி.கே.புதூர், சாவடி புதூர், மதுக்கரை, காளியாபுரம்,
அறிவொளி நகர், எட்டிமடை, கோவைப்புதூர் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
