கோவையில் ஆன்லைன் டிரேடிங் ரூ.72 லட்சம் போச்சு…

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் 50 வயது நபர் தனது தந்தையின் நிறுவனத்தில் மேலாளராக இருந்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வாட்ஸ் அப் எண் ஒரு வாட்ஸ் அப் குழுவில் மர்ம நபர்களால் இணைக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த வாட்ஸ் அப் குழுவில் முன்னணி நிறுவனங்களில் பங்குகளை வாங்குவது, விற்பது குறித்து பகிர்ந்து வந்துள்ளனர்.

அதன்பின் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், அவரிடம் முதலீடு செய்து ஆன்லைன் டிரேடிங் செய்து வந்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளனர் இதை நம்பி, அவர், அந்த மர்ம நபர் கொடுத்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு, 13 தவணைகளாக ரூ.72 லட்சத்தை அனுப்பி வைத்தார். இதையடுத்து அவர், பங்கு சந்தையில் இருந்து பணத்தை எடுக்க முடிவு செய்தார்.

ஆனால், அந்த பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. அவரிடம் பேசிய மர்ம நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போதுதான் அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதையடுத்து அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *