கோவை வெஸ்டர்ன் ரிங் ரோடு பணியில் ராயல்டி ரூ.30 கோடி மோசடியா…?!
கோவை மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.80 கி.மீ தூரத்திற்கு மேற்கு புறவழிச்சாலை (வெஸ்டர்ன் ரிங் ரோடு) அமைக்கப்பட்டது.
250 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த பைபாஸ் ரோடு போடப்பட்டதில் விதிமுறை மீறல் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. ரோடு போடும் போது கிராவல் மண் எடுத்தால் ஒரு டன்னிற்கு 100 ரூபாய் முதல் 150 ரூபாய் என ராயல்டி தொகை (சீனரேஜ் கட்டணம்) செலுத்த வேண்டும்.
ஆனால் இந்த கட்டணத்தை கனிம வளம் மற்றும் புவியியல் துறையினருக்கு செலுத்தாமல் மோசடியாக பணிகள் செய்யப்பட்டதாக தெரிகிறது. மொத்த தூரத்திற்கு சுமார் 26 லட்சம் கனமீட்டர் அளவிற்கு அதாவது சுமார் 44 வட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு கிராவல் மண் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அரசுக்கு செலுத்த வேண்டிய ராயல் டீ தொகை செலுத்தாமல் இருப்பது பெரும் மோசடியாக முறைகேடாக கருதப்படுகிறது. இதனை அரசு துறையினரும் வசூலிக்காமல் அப்படியே விட்டு விடக்கூடாது. ரிங் ரோடு பணிகளுக்கு எடுக்கப்பட்ட கிராவல் மற்றும் பல்வேறு கனிமங்களுக்கு ராயல்டி தொகையை கனிம வளம் வருவாய்த்துறையினர் வசூலிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் இதையை காரணம் காட்டி பல்வேறு நிறுவனங்கள் சாலை, பாலம் உள்ளிட்ட கட்டுமானங்களுக்கு அரசுக்கு ராயல்டி தராமல் மோசடியாக ஏமாற்றி விடும் நிலை இருக்கிறது. ஒப்பந்த பணி வழங்கும் போது இந்த விவரங்கள் உறுதி செய்து பின்னர் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது.
எனவே ராயல்டி வசூல் செய்ய வேண்டும். ரிங் ரோடு பணிகளுக்கு மட்டும் சுமார் 30 கோடி ரூபாய் அளவிற்கு ராயல்டி தொகை தராமல் மோசடி செய்யப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ரிங் ரோடு பணிகள் நடந்த போது கோவைப்புதூர், சுண்டக்காமுத்தூர் பகுதிக்கு செல்லும் ஓடையில் கிராவல் மண் மற்றும் மணல் போன்ற கனிமங்களை முறைகேடாக எடுத்து விட்டதாக அந்த பகுதி விவசாயிகள் புகார் கூறினர்.
இதற்கு விசாரணை நடத்தி அபராதம் விதிக்கப்பட்டது. அப்போதே ராயல் டி மோடி விவகாரம் குறித்து புகார் தரப்பட்டது. மேலும் சின்ன வேடம்பட்டி குளத்திலிருந்து எவ்வித அனுமதியும் பெறாமல் ரிங் ரோட்டிற்காக அதிகளவு கிராவல் மண் பெறப்பட்டது. இந்த மோசடி குறித்து விவசாயிகள் புகார் கூறியதால் அதிர்ச்சியடைந்த கலெக்டர் குளத்திலிருந்து கிராவல் மண் பெறுவதற்கு தடை போட்டார்.
வெஸ்டர்ன் ரிங் ரோடு பணிகளில் ராயல்டி மோசடி தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, கனிம் வளத்துறையினர் விசாரித்து உரிய தொகையை மீட்டு அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும் என லஞ்ச எதிர்ப்பு இயக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
