கோவையில் காதலி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய காதலன் கைது…

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த 25 வயது இளம் பெண்ணிற்கும்

சென்னையை சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் (26) என்ற இளைஞருடன் காதல் இருந்தது. கார்த்திக் மீது மாநில அளவில் காவல் நிலையங்களில் 31 குற்ற வழக்குகள் விசாரணையில் இருப்பதாக தெரிகிறது.

காதலர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது . இந்த நிலையில் இளம்பெண் கார்த்திக் உடன் பேச மறுத்துவிட்டார். இந்நிலையில் கார்த்திக் தனது நண்பர் மூன்று பேருடன் இளம்பெண்ணின் வீட்டிற்கு‌ சென்றார்.

அங்கே பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் நிரப்பிய பீர் மற்றும் மதுபான பாட்டில்களை தீ பற்ற வைத்து வீசினார். அப்போது வீட்டில் இருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

அப்போது அத்த பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து அங்கே தண்ணீர் எடுத்து ஊற்றி தீயை அணைத்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசில் புகார் தரப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகை கைது செய்தனர். தன்னிடம் காதலி பேச மறுத்து விட்டதால் கோபத்தில் இப்படி செய்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும் கார்த்திக் தனது கூட்டாளிகளுடன் தனியார் மதுபான கடையில் பீர் பாட்டில்கள் மற்றும் பெட்ரோல் பாட்டலுடன் சுற்றிய காட்சியும் கண்காணிப்பு கேமரா மூலமாக சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *