கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் 2 பேருக்கு குண்டாஸ்…!
கோவை சூலூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கார்த்திக் ( 33 ) என்பவர் கைது செய்யப்பட்டார் . இவர் மீது சிறார் பாலியல் பலாத்கார (போக்சோ) சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .
இவர் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்து குளக்கரையில் சடலத்தை போட்டு சென்றதாக தெரியவந்தது . கோவை மட்டுமின்றி மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கார்த்திக் கைது செய்யப்பட்டார் . இவர் போலீசிலிருந்து தப்ப முயன்ற போது அவரின் வலது கால் மற்றும் வலது கை உடைந்து விட்டதாக தெரியவந்தது.
இந்த வழக்கில் அவருக்கு உதவியாக இருந்த மோகன்ராஜ் (30) என்பவரும் கைது செய்யப்பட்டார் .இவர்கள் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் . இந்த நிலையில் இவர்கள் இரண்டு பேர் மீதும் குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் இன்று உத்தரவிட்டார்.
