கோவை கோட்டைமேடு கரி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி விசாக விழா…
கோவை கோட்டைமேடு கரி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி விசாகத் திருவிழா பிரம்மோற்சவம் கடந்த 23ம் தேதி துவங்கியது .
சோழமண்டல அரசனாகிய கரிகால சோழ மன்னரால் கோவை கோட்டைமேட்டில் இந்த ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தில் கருட உற்சவர் தினமான வைகாசி விசாக நட்சத்திர தினத்தன்று இந்த கோயிலில் திருத்தேர் உற்சவம் நடத்தும்படி கரிகால சோழன் உத்தரவிட்டு அந்த நடைமுறைப்படி தொன்று தொட்டு இந்த உற்சவம் ஆனது நடக்கிறது.
கடந்த 23ம் தேதி வாஸ்து சாந்தியுடன் விழா தொடங்கியது.
தொடர்ந்து அம்ச வாகனம், சேச வாகனம், பன்முக அனுமான் வாகனம் விதியுலா நடந்தது.
நான்காம் நாளாக இன்று கருட வாகன உற்சவ வீதி உலா நடந்தது.
நாளை திருக்கல்யாண உற்சவம் ஆறாம் நாளாக யானை வாகனம் உற்சவம் வரும் 30ம் தேதி திருத்தேர் வீதி உலா வரும் 31ம் தேதி குதிரை வாகனம் வரும் ஜூன் 1ம் தேதி தோளுக்கு இனியான் சப்பரம் உற்சவம்
ஜூன் இரண்டாம் தேதி கொடி இறக்கம் உற்சவர் திருமஞ்சனம், மஞ்சள் நீராட்டு நடக்க உள்ளது
இந்த கோயிலில் செல்வத் திருமகளாக ஸ்ரீ மகாலட்சுமி, கல்வி கடவுளான ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர், சக்கர ரூபமாக ஸ்ரீ சக்கரத்தாழ்வார் , பூமி கடவுள் ஆன ஸ்ரீ பூவராகர் அருள் பாலிக்கின்றனர்.
விழாவை காண ஏற்படுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.
