Coimbatore district police: கேண்டீன் முன் தடுப்பு வாகன ஓட்டிகள் கடுப்பு…!
கோவை மாவட்ட எஸ்பி அலுவலகம் முன்பு போலீஸ் கேன்டீன் இருக்கிறது.
இந்த கேண்டின் பகுதிக்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்காக போலீசார் சார்பில் இரும்பு கம்பி தடுப்புடன் கூடிய பார்க்கிங் ஏரியா உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்டேட் பேங்க் ரோட்டில் வரும் வாகனங்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்வதற்காக இந்த வழியை U turn செய்ய பயன்படுத்துகிறார்கள். ஆனால் இரும்பு தடுப்பு வேலி இருப்பதால் இங்கே வாகனங்கள் எளிதாக திரும்ப முடியவில்லை.
இரும்பு தடுப்பு மீது மோதி விடுவோமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் தவிப்படைந்துள்ளனர். போலீசார் highways department ரோட்டில் அத்துமீறி இரும்பு தடுப்பு அமைத்தது மட்டுமில்லாமல் பார்க்கிங் உருவாக்கி இருப்பது விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. போலீசே இப்படி செய்யலாமா என பொதுமக்கள் புலம்பி கொண்டு செல்லும் நிலைமை இருக்கிறது . இதை அகற்றினால் வாகனங்கள் இந்த வழியை யு டர்ன் செய்து செல்ல முடியும்.
