Agri University: இளம் அறிவியல் கோர்சில் சேர 28700 பேர் விண்ணப்பம்…
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் (வேளாண்மைப பிரிவு) இந்த கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும் (TNAU) மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் (AU) ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பட்டம் மற்றும் பட்டயம் பயில சுமார் 28700 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 3 இளமறிவியல் வேளாண் பாடப்பிரிவுகளுக்கும் ஒருமித்த வகையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு நடப்பு கல்வியாண்டில் உறுப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான எண்ணிக்கை 2516 ஆகவும் இணைப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான எண்ணிக்கை 4736 (அரசாங்க இடஒதுக்கீடு 3051 + மேலாண்மை இடஒதுக்கீடு 1685) ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டயப்படிப்புகளுக்கு 1240 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 6.5.2026 முதல் இணையதள வாயிலாக http://tnau.ucanapply.com இந்த ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பெற்று வருகிறது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 17.6.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணாக்கர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்திய பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 17.6.2026-க்குள் சமர்ப்பிக்கலாம்.
இதுவரை, பட்டப்படிப்புகளுக்காக 27,056 விண்ணப்பங்களும் மற்றும் பட்டயப்படிப்புகளுக்காக 1,702 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்வி பாடங்களுக்கான விவரங்களை 9488635077, 9486425076 என்ற அலைபேசி எண்களிலும் மின்னஞ்சல் (email): ugadmissions@tnau.ac.in மூலமாக வாரநாட்களில் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை தொடர்புகொள்ளலாம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வி பாடங்களுக்கான விவரங்களை 9865703537 என்ற அலைபேசியில்
மின்னஞ்சல் (email): agridean2015@gmail.com மூலமாக வாரநாட்களில் காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரை பெறலாம்.
