Road damage: தரம் கெட்ட தார் ரோடு… வாகனங்கள் படாதபாடு…
கோவை மாவட்டத்தில் 483.5 கி.மீ தூர மாநில நெஞ்சாலை, 531 கி.மீ தூர மாவட முக்கிய ரோடு (MDR), 1492,8 கி.மீ தூர இதர கிராம ரோடு (ODR) என 25074 கி.மீ தூரத்திற்கு ரோடு போடப்பட்டுள்ளது.
இதில் ஒரு வழிப்பாதையாக 604,5 கி.மீ தூர ரோடு, இடை வழிப்பாதையாக 329.8 கி.மீ தூர ரோடு, இரு வழிதட பாதையாக 640 கி.மீ தூர ரோடு, பாவு தள இரு வழிப்பாதையாக 262.2 கி.மீ தார் ரோடு, 4 வழிப்பாதையாக 151.9 கி.மீ தூர ரோடு, 6 வழிப்பாதையாக 18.4 கி.மீ தூர ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
மிக குறுகிய தரை மட்டத்தில் அதாவது 6 மீட்டர் எல்லைக்குள் 4483 பாலங்கள் இருக்கிறது. இது தவிர 232 சிறு பாலங்கள் 32 பெரிய பாலங்கள், 16 தாம்போகி (cause way) 1 மேம்பாலம், 13 ரயில்வே மேம்பாலம் (RoB), 5 ரயில்வே கீழ் பாலம் (RuB), ஒரு பாதசாரிகள் சுரங்க பாதை என 4783 பாலங்கள் இருக்கிறது.
அவினாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி, சத்தி, பாலக்காடு, சிறுவாணி, தடாகம் ரோடு என பிரதான மாவட்ட மாறில் எல்லை ரோடுகள இருக்கிறது. நெடுஞ்சாலை அல்லாமல் மாறகராட்சி எல்லைக்குள் 257 சதுர கி.மீ பரப்பில் 8 ஆயிரம் வீதிகளில் 9 ஆயிரம் கி.மீ தூரத்திற்கு அதிகமாக ரோடுகள் இருக்கிறது.
கடந்த 10 ஆண்டில், நெடுஞ்சாலை நிர்வாகம் ரோடு புதுப்பித்தல், சீரமைத்தல் தார் தளம் அமைத்தல் என 6 ஆயிரம் கோடி ரூபாயக்கு அதிகமாக செலவிட்டுள்ளது. பேகாவை மாநகராட்சி நிர்வாகம் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, ஊரக வளர்ச்சி முகமை மூலமாக 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமான தொகை செலவிடப்பட்டது.
ஆனால், காலாவதி நாட்களுக்குள் தார் ரோடு கரைந்து காணாமல் போய் விட்டதாக தெரியவந்துள்ளது. தர கட்டுப்பாட்டு துறை ஆய்வில் ரோடு தரம் என சான்று வழங்கப்பட்டு, கோட்ட பொறியாளர்கள் குழுவினர் ‘கோர் கட்டிங்’ செய்து தர பரிசோதனை செய்து உறுதி செய்த பின்னர் ரோடு தரமின்றி இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
புதிய ரோடு 5 ஆண்டு வரை தரமாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 3 ஆண்டுகளாக சேதம் ஏற்படாமல் இருக்க வேண்டும். ஆனால் சில மாதங்களில் புதிய ரோடு சேதமாகி விடுகிறது. கோவை மாவட்டத்தில், கடந்த 5 ஆண்டில் 1200 கி.மீ தூரமுள்ள ரோடு பழுதாகி சீரமைக்கப்பட்டுள்ளது.
70 முதல் 90 சதவீத ரோடு காலாவதி நாட்களுக்குள் சேதமாகி மறு சீரமைப்பு பணி நடத்த வேண்டிய நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தார் தளம், மில்லிங் பணிகள் முறையாக நடக்கவில்லை, தர கட்டுப்பாடு சோதனையும் தரமின்றி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தரமற்ற ரோடு பணிகள் தொடர்பாக தணிக்கை ஆய்வுகள் நடத்தப்படவில்லை சாலை ஆய்வாளர்கள் தரமின்றி ரோடு போடுவதை வேடிக்கை பார்த்தார்களா உதவி பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் கள ஆய்வில் இல்லையா என்ற கேள்விகள எழுந்துள்ளது.
ஒப்பந்த நிறுவனங்கள் தரமின்றி ரோடு போட கமிஷன் பர்சன்டேஜ் தான் காரணம் என கூறப்படுகிறது. பல மடங்களில் 40 சதவீதம் கமிஷன் போக 60 சதவீத தொகையில் அறைகுறையாக ரோடு போடுவதாக ஒப்பந்த நிறுவனங்களே வெளிப்படையாக குற்றம் சாட்டி பேசும் நிலையிருக்கிறது. பரசனடேஜ் கேட்பதால் தான் மோசமாக ரோடு போடவேண்டியிருக்கிறது.
கடைசியில் பில் வாங்க கூட கமிஷன் கேட்டு டார்ச்சர் செய்வதாக ஒப்பந்தாரர்கள் புலம்புகின்றனர். கோவை மாநில நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் உள்ள டெஸ்டிங் சென்டரில் டெஸ்டிக் முறையாக நடப்பதில்லை. தார கலப்பு சதவீதம், ரோட்டின் தடிமன், பினிசிங் விவரங்களை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. தர குறைபாடு இருந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் அதிகாரிகள் தொடர்ந்து தவறு செய்வதாக கூறப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை வட்டாரத்தில் கோட்டங்கள் பிரித்து பொறியாளர்கள் கூண்டோடு மாற்றப்பட்டனர். அதிகாரிகள் மாறினாலும் சிஸ்டம் மாறாத நிலையிருக்கிறது. பல ஆண்டு காலம் பணிகள் தாமதத்திற்கும் அதிகாரிகளின் செயல்பாடு சரியில்லாதது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
விபத்து, வாகன பழுது போக்குவரத்து நெரிசலுக்கு மோசமான ரோடு முக்கிய காரணமாக இருக்கிறது. மாதந்தோறும் மாவட்ட கலெக்டர் தலைமையில் சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் விபத்து, மோசமான ரோடு தொடர்பாக ஆய்வு செய்து எந்த தீர்வும் காணாமல் மிக்சர், முந்திரி பாக்கோடாவுடன் முடித்து கொள்வது வாடிக்கையாகி விட்டது.
நெடுஞ்சாலைத்துறையில் லஞ்சம், கமிஷன் தவறுக்கு முக்கிய அதிகாரிகள் துணை போவது தொடர்கிறது.
மாநகராட்சி நிர்வாகத்தின் 70 சதவீத ரோடு, நெடுஞ்சாலைத்துறையின் ல சதவீத ரோடு பழுதாகி கிடக்கிறது. பாதுகாப்பு வசதிகளும் போதுமான அளவு செய்யப்படவில்லை. இனி வரும் காலங்களில், ரோடு சீரமைப்பு, சாலை பாதுகாப்பு கட்டமைப்பு பணிகளில் அதிகாரிகள் முறைகேடு செய்யாமல் பணிகள் நடத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அளவு அதிகாரிகள் முறைகேடு செய்யாமல்
