Mins department: கோவையில் 100 குவாரிகளில் ட்ரோன் சர்வே நிறைவு…!

கோவை மாவட்டத்தில் 161 கல் குவாரிகள் இருக்கிறது. புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர், மாவட்ட அளவில் கல் குவாரிகளில் விதிமுறை மீறல் கண்டறிய டிரோன் சர்வே நடத்த உத்தரவிடப்பட்டது.

கடந்த 2 வாரங்களாக டிரோன் மூலமாக சர்வே பணி நடக்கிறது. கனிம பொருட்களின் அளவு, கல் குவாரிகளின் பரப்பு, அரசுக்கு முறையாக செலுத்திய ராயல்டி, பசுமை வரி குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முறைகேடு செய்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரிகள் உரிமம் இன்றி செயல்பட்டால் அதனை மூடி சீல் வைக்க வேண்டும்.

குவாரிகளில் கனிமம் எடுக்கும் அளவு முறைப்படுத்த வேண்டும். தினமும் எத்தனை கனமீட்டர் அளவிற்கு கனிம பொருட்கள் சேகரிக்கப்படுகிறது. கனிமங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலமாக கண்டறியப்பட்டு வருகிறதா?,

கேரளா மாநிலத்திற்கு சப்ளை செய்யப்படும் கனிமங்கள் அளவு குறித்த விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் 5 குழுக்களாக பிரித்து டிரோன் சர்வே நடத்தப்படுகிறது. இதில் சுமார் 100 குவாரிகளில் சர்வே பணி முடிக்கப்பட்டது. இன்னும் 2 வாரங்களில் மொத்த சர்வே பணியும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்த குவாரிகளிலும் ஆய்வு முடிந்த பின்னர் உயர் அதிகாரிகளின் பார்வைக்கு விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கனிம வளம் மற்றும் புவியியல் துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *