பானைகளில் புதைந்த காசுகள்

வெள்ளலூரில் கி.பி. 1842ம் ஆண்டில் ஒரு விவசாய நிலத்தை தோண்டியபோது பானை பானையாக 1213 காசுகள் கிடைத்தன.

இந்த காசுகள் 170 ஆண்டுகளுக்கு பின் தொல்லியல் துறைக்கு கிடைத்து. இது தொடர்பாக நடந்த ஆராய்ச்சியில் இந்த காசுகள் அகஸ்டஸ், திபிரியெஸ் காலத்தை சேர்ந்தது என கண்டறியப்பட்டது. பொள்ளாச்சி வட்டாரத்தில் பட்டளை கிராமத்தில் கி.பி 1800ம் ஆண்டின் ரோமன் நாட்டு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவையும் பானையில் புதையலாக கிடைத்தவை.

பல்லடம் சாவடிபாளையத்தில் பெருங்கற்கால சின்னத்தில் மண் குடுவையில் முத்திரை நாணயங்கள் கிடைத்தன. அகிலாண்டபுரத்தில் 1941ம் ஆண்டில் 30 ரோமன் வெள்ளி காசுகள் கண்டறியப்பட்டன வாசம்பாளையத்தில் 48 முத்திரை மற்றும் ரோமன் நாணயங்கள், ஆனைமலை சிங்காநல்லூர் அருகே 40 ரோமன் காசுகள் கிடைத்தன. கோவை மாவட்டத்தில் சோழர் காசு, சேரர் காசு, பாண்டியர் காசு, ரோமானியர் காசுகள் ஆங்காங்கே புதையலாக கிடைத்துள்ளன.

வெள்ளலூர் அருகே தென்னூரில் எம்பெருமான் கோயிலில் நந்தா விளக்கு எரிக்க பழங்காசும், கழஞ்சரை செம்பொன்னும் வழங்கப்பட்டதாக கோக்கண்டன் வீரநாராயணன் காலத்து கல்வெட்டு ஆதாரத்தின் மூலமாக அறியப்பட்டுள்ளது. வெளிநாட்டு வணிகர்கள் கடல் மார்க்கமாக குறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு, வைநாடு வழியாக கோவை வந்துள்ளனர்.

ஏலக்காய் கடுக்காய், மிளகு, தானியங்கள் வாங்கியதற்கு ஐம்பொன் காசுகள் விலையாக தரப்பட்டுள்ளது. இந்த காசுகளை வீட்டில் வைக்கும் வழக்கம் கிடையாது. விவசாயிகளின் வீடுகளில் அந்த காலத்தில் பெரிய பீரோக்கள் இல்லை. தானியங்களை வைக்கும் கிடங்கு, விவசாய நிலங்களில் பானைகளில் போட்டு காசுகளை புதைப்பது காலம் காலமாக நடந்தது.

இப்படி புதைத்து பதுக்கிய காசுகள் தான் பிற்காலத்தில் புதையலாக பெறப்பட்டுள்ளது. இப்போது எதாவது பகுதியில் பழங்கால காசு புகையல் கிடைத்து வருவது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *