வேளாண் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் கல்வித் திறன், ஆராய்ச்சி, புதுமை, தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வேளாண் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம், வேளாண்மை, தோட்டக்கலை,
வேளாண் பொறியியல், வனவியல், வேளாண் உயிரித் தொழில்நுட்பம், சமூக அறிவியல், உணவுத் தொழில்நுட்பம், வேளாண் வணிகம், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் வேளாண் அறிவியலின் பிற வளர்ந்து வரும் துறைகள் உள்ளிட்ட 34 பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டப்படிப்புகளை வழங்குகிறது. இந்த படிப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான இணையவழி மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு இன்று துவங்கியது.
இதற்கு ttps://admissionsatpgschool.tnau.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வனவியல், பட்டுப்பூச்சி வளர்ப்பு, சமூக அறிவியல் மற்றும் தகவல் கையேட்டில் குறிப்பிடப்பட்டு உள்ள பிற தகுதிகளான இளநிலை பட்டப்படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தற்போது இளநிலை படிப்பின் இறுதியாண்டு இறுதி பருவத்தில் படிக்கும் மாணவர்கள் தாங்கள் முடித்துள்ள அனைத்து பருவங்களின் மதிப்பெண் பட்டியல்களை பதிவேற்றி விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு விண்ணப்பதாரரும் ஒரே நேரத்தில் தகுதியுள்ள அதிகபட்சம் இரண்டு பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் தேர்வு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ‘நடத்தும் பொது நுழைவுத்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறும். நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளை பொறுத்தும் சேர்க்கையின்போது சமர்ப்பிக்க தேவைப்படும் ஆவணங்களை பொறுத்தும் சேர்க்கை உறுதி செய்யப்படும்.விண்ணப்பதாரர்கள்
விண்ணப்பிக்கும் முன் சேர்க்கை இணையதளத்தில் உள்ள தகவல் கையேட்டை கவனமாகப் படிக்க வேண்டும். அதில் தகுதி தரநிலைகள் இடஒதுக்கீட்டு கொள்கை, சேர்க்கை நடைமுறை, முக்கிய தேதிகள் மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் தொடர்பான விரிவான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த முதுநிலைப் பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தகவல் கையேட்டை பல்கலைக்கழகத்தின் செயல் துணைவேந்தர் சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். இதில், முதுநிலைப்பட்ட மேற்படிப்பு பயிலகத்தின் முதன்மையர் பாபு மற்றும் பிற முதன்மையர்கள் உடனிருந்தனர். மாணவர்கள் இணையவழி
விண்ணப்பங்களை வரும் 31-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.
மாணவர் சேர்க்கை தொடர்பான தகவலுக்கு, pgadmission@tnau.ac.in என்ற மின்னஞ்சல் அல்லது 94890-56710 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Love the vibe of this site! It is very intuitive and the bonuses for new players are actually worth it. Keep it up! phjiliday