கோவையில் 2112 கிலோ கஞ்சா தீயில் எரிப்பு…!

கோவை திருப்பூர் ஈரோடு நீலகிரி சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் நடவடிக்கை வழக்குப்பதிவு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டது .

இதில் மேற்கு மண்டலம் மாவட்டங்களில் 2112 கிலோ எடையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ‌ இதேபோல் 4268 போதை மாத்திரை , 103 கிராம் மெத்த பெட்டமின் மற்றும் ஊசி மற்றும் தடை செய்யப்பட்ட இதர போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை தமிழக மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், கோவை சரக டிஐஜி சாமிநாதன் உள்ளிட்டோர் தலைமையில் இன்று இரவு செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தீயில் போட்டு அழிக்கப்பட்டது.

தமிழக மேற்கு மண்டல மாவட்டங்களில் 1036 வழக்குகளில் தொடர்புடைய இந்த போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவு போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. கஞ்சா போதை மாத்திரை உள்ளிட்ட பல்வேறு வகையான போதை பொருட்களை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

One thought on “கோவையில் 2112 கிலோ கஞ்சா தீயில் எரிப்பு…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *