பார்ட் டைம் வேலை என 34.41 லட்ச ரூபாய் சுருட்டல்… சைபர் கிரைம் போலீசில் புகார்
கோவை அப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (39). இவர், ஆன்லைனில் வேலை வாய்ப்பு குறித்த விவரங்களை பார்த்தார்.
பகுதி நேர வேலை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து கோபிநாத்தில் பார்ட் டைம் பணிக்கு ஒப்புதல் தந்தார். அவரை ஆன்லைனில் தொடர்பு கொண்டவர்கள் பணம் முதலீடு செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். கோபிநாத் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு 5 தவணைகளில் 7.84 லட்சம் ரூபாய்
வங்கி பரிவர்த்தனையில் அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு நீண்ட நாட்கள் ஆகியும் கோபிநாத்திற்கு அவர்கள் எந்த லாப பணத்தையும் கொடுக்கவில்லை.
இதுகுறித்து கோபிநாத் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது மேலும் முதலீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது கான் லாப தொகை கிடைக்கும் என்று கூறியுள்ளனர். சந்தேகம் அடைந்த கோபிநாத் தனது பணம் உடனடியாக வேண்டும் என கேட்ட போது அவர்கள் தர மறுத்து விட்டார்கள்.
மேலும், அவர்களின் ஆன்லைன் தொடர்பும் நின்று விட்டது. இதைத்தொடர்ந்து கோபிநாத் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதேபோல் பொள்ளாச்சி சோழீஸ்வரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ் (62). ஆன்லைன் மூலம் ஓட்டல் பதிவு செய்து கொடுப்பது தொடர்பாக பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக இவருக்கு தகவல் கிடைத்தது.
இதற்காக, ஆன்லைன் மூலமாக 24.93 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தார். இந்த தொகை மோசடியாக அபகரிக்கப்பட்டதாகவும் தனக்கு தொகை கிடைக்கவில்லை எனவும் சுப்புராஜ் அளித்த புகாரின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் அம்ப்ரோஸ் (64). இவர் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 17ம் தேதி இவரது செல்போனுக்கு ஒரு தகவல் வந்தது. அதில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 1.64 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை உரிய இணையத்தில் கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆண்ட்ராய்டு பேக்கேஜ் கிட் என்ற ஏபிகே ஆன்லைன் தளத்தில் தனது பெயர் மற்றும் மற்ற விவரங்களை பூர்த்தி செய்தார். இந்த நிலையில் அவரின் வங்கி கணக்கில் இருந்து அவருக்கு தெரியாமல் 1.64 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது. அவர் இது தொடர்பாக பார்த்த போது அது போலியான வலைகளம் என தெரியவந்தது.
ஏமாற்றப்பட்டதை அறிந்த ராபர்ட் அம்ப்ரோஸ் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். மாவட்டத்தில் 3 பேரிடம் 34,41 லட்சம் ரூபாய் மோசடியாக அபகரிக்கப்பட்டதாக தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

If you are looking for a reliable APK that actually works without glitches, this is it. The loading speed is amazing. Get your 8k8app4apk and start winning.
The variety of games is just amazing. I spend hours here and never get bored. Definitely visit phph33comapplogin for some real action.