கோவையில் போதை மாத்திரைகள் , கஞ்சா விற்பனை கணவர் மனைவி கைது
கோவை குனியமுத்தூர் மகாலட்சுமி நகர் பகுதியில் சேர்ந்தவர் சல்மான் கான் (24 ). இவர் மனைவி பாத்திமா சஹானா (20) .
இவர்கள் அதே பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக குனியமுத்தூர் போலீசாருக்கு புகார் வந்தது போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்திய போது இவர்களிடமிருந்து 1400 போதை மாத்திரைகள் மற்றும் 300 கிராம் இடையில் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது .
போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். கணவர் மனைவி இருவரும் சேர்ந்து போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவர்கள் எங்கே இருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வாங்கி வந்தார்கள். இவ்வளவு மாத்திரைகள் எப்படி இவர்களுக்கு கிடைத்தது .இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
