பரிகாரம் செய்வதாக பழகி பலாத்காரம் : கோவை ஜோதிடர் மீது பெண் புகார்…!

திருப்பூரைச் சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள தமிழக மேற்கு மண்டல போலீஸ் ஐஜி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக என் பெற்றோர் பல்வேறு கோவில்களில் பரிகாரம் செய்தல், ஜாதகம் பார்த்தல் போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வந்தனர். எனக்கு திருமண வரண் கிடைக்காததால், எனது பெற்றோர் விரக்தியில் இருந்தனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் மூலம் கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஜோதிடர் ஒருவரை சந்தித்தேன் எனக்கு ஜாதகம் பார்த்து, பரிகாரங்களை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என கூறினார். பரிகாரம் செய்வதற்காக என்னை நேரில் அழைத்து சந்தித்தார். பின்னர் அவரே என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறினார்.

என்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டார். அதன்பின் கடன் பிரச்னை இருப்பதாக கூறி, நான் திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை கேட்டார். அவரிடம் ரூ.1.50 லட்சத்தை கொடுத்தேன் பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் திருமணம் செய்ய மறுத்து விட்டார். நான் விசாரித்தபோது, அந்த ஜோசிடர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என தெரியவந்தது.

இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். என்னை ஏமாற்றி பாலியல் ரீதியாக பயன்படுத்தி, பணத்தையும் பெற்றுக்கொண்ட ஏமாற்றி விட்டார். அவரிடம் நான் கேட்ட போது, எனக்கு போலீஸ் ஐஜிக்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் வாடிக்கையாளர்கள், என்னை எதிர்த்தால் உயிருடன் விடமாட்டேன் என மிரட்டினார். இதனால் நான் மிகவும் பயந்து போய் விட்டேன்.

எனது வாழ்க்கையை சீரழித்த ஜோதிடரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறியுள்ளார். இந்த புகார் மனுவை கோவை மாவட்ட எஸ்.பி மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கும் அவர் அனுப்பியுள்ளார்.

2 thoughts on “பரிகாரம் செய்வதாக பழகி பலாத்காரம் : கோவை ஜோதிடர் மீது பெண் புகார்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *