சைபர் கிரைம் மோசடி நிதி இழப்பில் கோவைக்கு முதலிடம்…!
இணையவழி சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் `ஹாட்ஸ்பாட்’ மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 7வது இடத்தைப் பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், சைபர் மோசடிகளால் பொதுமக்கள் அதிகளவு பணத்தை இழக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் முக்கிய திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் சார்ந்த முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக மாதந்தோறும் ‘பிரகதி’ கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், கடந்த இரண்டு மாதங்களாக சைபர் குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து தீவிரமாக விவாதிக்கபட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 52 வது கூட்டத்தில் சைபர் குற்றங்கள் தடுப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்து புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றங்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டது.
தேசிய அளவில் சைபர் குற்றங்கள் அதிகம் நிகழும் பகுதிகளைக் கொண்டு ஹாட்ஸ்பாட் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கடந்த மாதம் நடைபெற்ற 53-வது பிரகதி கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதில், சைபர் குற்ற ஹாட்ஸ்பாட் பட்டியலில் மேற்கு வங்கம் முதலிடத்திலும், உத்தரபிரதேசம் இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த வரிசையில் தமிழகம் 7-வது இடத்தில் உள்ளது.
அதேபோல, ஆன்லைன் மோசடிகள் மூலம் பொதுமக்கள் அதிக அளவில் பணத்தை இழக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தையும், கர்நாடகா 2 வது இடத்தையும், உத்தரபிரதேசம் 3 வது இடத்தையும் பிடித்துள்ளன. இதில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் நடப்பு 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரையிலான 7 மாத காலத்தில் மட்டும் சுமார் 88,385 சைபர் குற்றப் புகார்கள் பதிவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
, “கடந்த இரண்டு மாதங்களாக பிரகதி கூட்டத்தில் சைபர் குற்றங்கள் குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தேசிய அளவில் சைபர் குற்றங்களால் அதிக நிதியிழப்பு ஏற்படும் மாநிலங்களில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ள நிலையில், தமிழக அளவிலான பாதிப்பில் கோவை மாவட்டம் முதலிடத்திலுல் உள்ளது. வரவிருக்கும் பிரகதி கூட்டத்திலும் சைபர் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது சைபர் கிரைம் தெரிவித்தனர்.
