ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தல் போலீஸ் வருவாய் துறையினர் விசாரணை…
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையில், அரிசி மூட்டைகள் முறைகேடாக வாகனங்களில் ஏற்றப்பட்டு கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ரேஷன் கடையில் இருந்து மூட்டை, மூட்டையாக அரிசியை ஸ்கூட்டரில் ஏற்றிச் செல்லும் காட்சிகளை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தக் கடத்தலுக்கு ரேஷன் கடைக்காரர்கள் உடந்தையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பயோமெட்ரிக் இருந்தால் மட்டுமே அரிசி மற்றும் ரேஷன் பொருட்கள் வாங்க முடியும் என்ற நிலை உள்ளது இந்த நிலையில் எப்படி மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது.
பொதுமக்கள் பெயரில் போலியாக பயோமெட்ரிக் ரேகை வைத்து ஏற்கனவே அரிசி வாங்கியது போல் கணக்கு காட்டி மோசடி செய்யப்பட்டதா என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல் துறை மற்றும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கடத்தல் விவகாரம் கோவையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

I’ve been trying a few sites lately and this one is actually smooth. The payouts are fast and the interface is easy to navigate. Definitely check out phwin25ph if you want a hassle-free experience.