உக்கடம் பஸ் ஸ்டாண்ட் 2 பணிகள் தீவிரம்

கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்ட் இரண்டாக பிரித்து டெர்மினல் 1, 2 என அமைக்கப்படுகிறது.

டெர்மினல் 1 பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது டெர்மினல் 2 பணிகள் ரூ.21.55 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. கோவை மாவட்டத்தில் தெற்கு நோக்கி செல்லும் சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 2 ஏக்கரில் மேற்கூரை மற்றும் கூரை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

உணவுக் கூடம், கழிவறைகள் மற்றும் சிசிடிவி கண்காணிப்புக் கட்டுப்பாட்டு அறை போன்ற பிற வசதிகள் தொடர்பான பணிகள் நிலுவையில் உள்ளன. சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும். 32 பஸ்கள் நிறுத்த ரேக் அமைக்கப்படும். டெர்மினல் 1ல் கடைகள் இருக்கிறது. டெர்மினல் 2 பகுதிகளில் வணிகக் கடைகள் இருக்காது. அங்கு ஒரு உணவுக்கூடம் மட்டுமே இடம்பெறும்.

சுமார் 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன, மீதமுள்ள பணிகள் ஒரு மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டவுடன், பொள்ளாச்சி, பழனி, பாலக்காடு மற்றும் பிற மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்களுக்குத் தெற்கு நோக்கிய பஸ் சேவைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சியினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *