மதுக்கரையில் மலேசியா காரர்களை துப்பாக்கியால் சுட முயன்ற மர்ம நபர்கள்…!

மலேசியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் சுற்றுலா தளங்களை பார்வையிட்டனர். இன்று இரவு அவர்கள் பாலக்காடு வழியாக கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். நவக்கரை அருகே வந்தபோது பெட்ரோல் பங்க் அருகே இரண்டு பேர் இருந்துள்ளனர் அவர்களுக்கும் மலேசியா சுற்றுலா வாகனத்தில் வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வேனில் சென்னை நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். இவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு பேர் மதுக்கரை மார்க்கெட் தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது துப்பாக்கியால் சுட முயன்றனர். இதை முன்கூட்டி அறிந்த டிரைவர் வாகனத்தை சமாளிப்பாக ஓட்டி சென்றார். ஆனால் வாகனம் பள்ளத்தில் சாய்ந்தது.
இந்த நிலையில் பின் தொடர்ந்து வந்த நபர்கள் தங்களிடம் இருந்து அரிவாளால் மலேசியா சுற்றுலா பயணிகள் லோகநாதன் (53) மற்றும் யுகேந்திரன் (21) ஆகியோரை வெட்டி தப்பிச் சென்றனர். இது தொடர்பாக மதுக்கரை போலீசில் புகார் தரப்பட்டது .காயமடைந்த இரண்டு பேரும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் கோவை
மாவட்ட எஸ்பி நேரடியாக இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார். இதில் துப்பாக்கியால் சுட்ட நபர்கள் தொடர்பான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை . ஆனால் போலீஸ் சார்பில் தாக்குதல் மட்டுமே நடத்தப்பட்டது துப்பாக்கியால் சுடவில்லை என தெரிவிக்கப்பட்டது . மலேசியா சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டுக்கு செல்வதற்கு பல்வேறு பாதிப்பு ஏற்படும் என பயந்து போய் இந்த விவகாரம் தொடர்பாக புகார் தர மறுத்து விட்டனர்.
இருப்பினும் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் யார் என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இருதரப்புக்கும் ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக முக்கிய தகவல்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். துப்பாக்கியுடன் கோவையில் மர்ம நபர்கள் சுற்றி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
