203 வாகனங்கள் விரைவில் ஏலம்…
கோவை மாநகரில் வெரைட்டி ஹால், ரத்தினபுரி, சரவணம்பட்டி ஆகிய போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான வாகனங்கள் நீண்டநாட்களாக கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்தன.
அப்பகுதியில் நின்ற வாகனங்கள் குறித்து எழுந்த சந்தேகத்தின் பேரில் அந்த 3 போலீஸ் ஸ்டேஷன் போலீசாரும் ஆய்வு செய்தார். தொடர்ந்து ரத்தினபுரியில் 56 வாகனங்களும், சரவணம்பட்டியில் 51 வாகனங்களும், வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் 96 வாகனங்களும் என கேட்பாரற்றுக் கிடந்த மொத்தம் 203 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.
இதுவரை அந்த வாகனங்களுக்கு எந்தவொரு உரிமையாளரும் நேரில் வந்து உரிமை கோரவில்லை. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த 203 வாகனங்களையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலமாக அடுத்தக்கட்ட சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதற்காக ஒப்படைக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
