கோவை வனக்கல்லூரியில் இடிந்து கிடக்கும் கட்டடங்கள்
கோவை ஆர்எஸ் புரத்தில் வனக்கல்லூரி அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் மாவட்ட வன அலுவலகம், பறக்கும் படை வனக்கல்லுாரி, ஆராய்ச்சி பிரிவு,காஸ் பாரஸ்ட் மியூசியம், தென்னக வனசாகர் கல்லூரி, ஆராய்ச்சி மையங்கள், மரப்பெருக்க நிறுவனம் என பல்வேறு பிரிவுகள் செயல்படுகிறது.
இவற்றில் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டிய பல கட்டடங்கள் இடியும் அபாயத்தில் இருக்கிறது. குறிப்பாக குடியிருப்பு மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்திய கட்டடங்கள் விரிசல் விட்டு காணப்படுகிறது. சில கட்டடங்களில் காலி செய்யப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கோவை வனசரக அலுவலகமாக இருந்த கட்டடமும் பயன்பாடின்றி மூடி கிடக்கிறது. ஓட்டு கூரையில் அமைந்துள்ள 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பயன்பாடின்றி இருக்கிறது.
சில கட்டடங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பதால் அதில் அலுவலக பணிகளை செய்ய முடியாமல் வனத்துறையினர் தவிப்படைந்துள்ளனர்.
இது தொடர்ந்து வனக்கல்லூரி அலுவலர்கள் கூறுகையில், “பல ஏக்கர் பரப்பிலான வளாகம் முட்புதர் காடுகளாக இருக்கிறது. பாம்பு, தேள் நடமாட்டம் அதிகமாகி விட்டது. இந்த வளாகத்தில் உள்ள முட்புதர்களை ஜேசிபி மூலமாக அகற்ற பல ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.பாழடைந்த |நிலையில், 40க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இருக்கிறது.
இந்த வளாகத்தில் அதிக நபர்கள் வாக்கிங் சென்று வந்தார்கள். சரியான சூழல் இல்லாததால் வாக்கிங் செல்வோர் குறைந்து விட்டனர். கல்லூரி வளாக ரோடுகளும் சேதமாகி விட்டது. கண்ட இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. ஒரு காலத்தில் இந்த பகுதி பசுமையான தோட்டமாக இருந்தது. ஆனால் போதுமான பராமரிப்பு இல்லாமல் இந்த பகுதிகளில் பசுமை நிலை மாறி விட்டது. இதை எல்லாம் சீரமைக்காமல் விட்டு விட்டார்கள். “என்றனர்.

The app is a lifesaver for gaming on the go. No more worrying about browser crashes. Everything is just a tap away on 8jililoginapp
The variety of games here is impressive. I spent a few hours exploring and I’m genuinely hooked on the gameplay. Check out phslotok