குளங்களில் கரையாத விநாயகர் சிலைகள்…
கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. மாவட்ட அளவில் 2336 விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. குறிச்சி குளம், சிங்காநல்லூர், முத்தண்ண குளம் என 22 நீர் தேக்கங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கள் வழிவகை செய்யப்பட்டிருந்தது.
ஆனால், இதில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் முழுமையாக கரைக்கப்படவில்லை. சில இடங்களில் சிலைகளை உடைக்கப்பட்டு அறைகுறையாக ஆங்காங்கே போடப்பட்டிந்தது. பிரதிஷ்டை செய்து பூஜித்து நீரில் கரைக்க ஆசையுடன் கொண்டு வந்த பக்தர்கள் சிலைகள் ஆங்காங்கே கிடப்பதை பார்த்து தவிப்படைந்துள்ளனர்.
சிலைகள் கரைக்கும் பணி தீயணைப்பு துறை வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால், சிலைகளை இந்த துறையினர் முழுமையாக நீரில் கரைக்காமல் வாங்கி நீரில் மூழ்க வைத்து அப்படியே விட்டு விட்டதாக தெரியவந்துள்ளது.
மாவட்ட அளவில் களி மண்ணால் செய்த சிலைகள் மட்டும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் (PoP) பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையில் செய்த சுற்று சூழலை பாதிக்கும் மூலப்பொருள் கலப்பு இன்றி சிலைகள் உருவாக்க அறிவுரை வழங்கப்பட்டது.
சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கூடாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும்பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், சிலர் விதிகளை மீறி செய்கை பொருட்களை பயன்படுத்தி சிலைகள் தயாரித்ததால் நீரில் கரையாமல் இருப்பதாக தெரிகிறது. மேலும், நீர் நிலையில் போதுமான நீர் இருப்பு இல்லாததும் சிலைகள் கரையாமல் இருக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சிலைகளை முழுமையாக கரைக்க மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு துறை, மாசு கட்டுபாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

If you are looking for that gacor feeling then this is the place to be. The slots are hitting hard today. Glad I found zeus75comgacor just in time for the weekend.