OAP: முதியோர் உதவித்தொகை கிடைக்காமல் ஏமாற்றம்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடக்கிறது.

இம்முகாமில், முதியோர் உதவி தொகை மற்றும் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பங்கள். குவிகின்றன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அரசு சார்பில், மகளிருக்கு உரிமை தொகையாக மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என தவெக தேர்தல் அறிக்கையில் பிரதானமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பி, மாதம்தோறும் தலா ஆயிரம் ரூபாய் பெற்று வந்த மகளிர், இனி மாதம் 2,500 ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆனால், அந்த தொகை வழங்கப்படவில்லை. மாறாக, முந்தைய திமுக அரசு வழங்கிய அதே 1,000 ரூபாய்தான் வழங்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் மகளிர் உரிமை தொகை கேட்டு 600க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளன இந்த மனுக்களை பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது சமூக பாதுகாப்பு துறையினரின் பொறுப்பு. ஆனால் அவர்கள். இம்மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தவெக அரசு பொறுப்பேற்ற பின்னர் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

மகளிர் உரிமை தொகை கேட்டு வரும் மனுக்களை வாங்கலாமா? வேண்டாமா? என்ற அறிவிப்பு எதுவும் அரசியிருந்து வரவில்லை. இதனால், மாவட்ட அளவிலான அதிகாரிகள் என்ன செய்வது என தெரியாமல், வருகிற மனுக்களை மட்டும் வாங்கி வைத்துக்கொள்கின்றனர். கடந்த திமுக ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அதே நடைமுறையைத்தான் தற்போதும் பின்பற்றி வருகின்றனர். இதனால், மனு கொடுத்த பெண்கள் தொடர்ந்து ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

மக்கள் குறைதீர்ப்பு முகாம் மட்டுமின்றி முதல்வரின் தனிப்பிரிவு, பிற குறைதீர்ப்பு கூட்டம் என பல வகைகளில் இதுவரை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில், சிலர் மற்றும் அதற்கு மேற்பட்ட முறை விண்ணப்ப மனு கொடுத்துள்ளனர். எந்த விண்ணப்பமாக இருந்தாலும் சரி பெறப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களுக்கு பதில் தர வேண்டும் என்பது நடைமுறை உத்தரவு, ஆனால், இந்த விதிமுறைப்படி தீர்வு காணாமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளது பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

இதுதவிர, முதியோர் உதவி தொகை கேட்டும் விண்ணப்பங்கள் குவிகின்றன. தமிழகத்தில் எந்த ஆட்சி) அமைந்தாலும், 40 வயது கடந்து, கணவனை இழந்தவர்களுக்கு விதவை உதவிதொகை, 60 வயது கடந்தவர்களுக்கு முதியோர் உதவிதொகை, மாற்று திறனாளிகள் உதவி தொகை, கைவிடப்பட்டோர் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், இதுதொடர்பான விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. படிப்பறிவு இல்லாத பெண்களின் அறியாமையை பயன்படுத்தி, அரசு உதவிதொகை திட்டங்களை நிராகரிக்கும் அவலம் தொடர்கிறது.

இதுபற்றி சமூக பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், “கோவை மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகையாக மாதம்தோறும் 5.12 லட்சம் பேர், தலா ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர். தவிர, முதியோர் உதவித்தொகை உள்பட மாதம் ஆயிரம் ரூபாய் பெற / வகையான உதவி தொகை திட்டங்கள் இருக்கிறது. மாவட்ட அளவில் இதுபோன்ற விண்ணப்பங்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடமிருந்து இதுவரை உத்தரவு வரவில்லை. அதுதொடர்பான விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. கடந்த காலங்களில் தொகை பெற்றவர்களுக்கு மட்டும் தொடர்ந்து வழங்கப்படுகிறது” என்றனர்.

2 thoughts on “OAP: முதியோர் உதவித்தொகை கிடைக்காமல் ஏமாற்றம்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *