மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு சென்று காட்டுக்குள் மாயமானவர் மீட்பு…
கோவை மேல்முடி ரங்கநாதர் கோயிலுக்கு சென்ற பக்தர் காட்டில் மாயான நிலையில், அவரை 3 மணி நேரம் தேடி வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கோவை மேற்குதொடர்ச்சி மலை கடாகம் வடக்கு சுற்று வட்டார பகுதியில் மேல்முடி ரங்கநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக காட்டு பகுதியில் நடந்து சென்றும், தடாகம் மலைப்பகுதி வழியாகவும் செல்ல முடியும்.
சுமார் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை கரடுமுரடான செங்குத்தான மலைப்பாதை வழியாக கோயிலுக்கு செல்ல வேண்டும். புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில், நேற்று போத்தனூர் பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியம் (57) என்பவர் தடாகம் வழியாக கோயிலுக்கு சுமார் 10 பேர் கொண்ட குழுவினருடன் மலையேற்றத்தில் ஈடுபட்டடுள்ளார். இந்த குழுவினர் மேல் முடிக்கு சென்று சாமி தரிசனம் செய்து நேற்று மாலை கீழே இறங்கியுள்ளனர். அப்போது, பாலசுப்ரமணியத்திற்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து, அவர்
சற்று நேரம் காட்டிற்குள் ஓய்வு எடுத்த நிலையில், அவரது குழுவினர் அங்கிருந்து சென்றனர். பின்னர், இருட்டான நிலையில் காட்டில் வழி தெரியாமல் அலைந்துள்ளார். பின்னர், தன் மனைவியை போனில் தொடர்பு கொண்டு காட்டில் வழி தெரியாமல் சுற்றித்திரிந்து பாதி வழியிலேயே தங்கி விட்டதாகவும், தன்னுடன் யாரும் இல்லை எனவும் தகவல் தெரிவித்து தனது லொகேஷனை ஷேர் செய்துள்ளார்.
அதன்பின், பாலசுப்ரமணியம் மொபைல் போன் ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளது. இதையடுத்து, அவரது மனைவி
சென்னை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பாலசுப்ரமணியன் குறித்து புகார்
தெரிவித்துள்ளார். இந்த தகவலை அடுத்து, கோவை வனச்சரக வனப்பணியாளர்கள் குழுவாக சென்று
மேல்முடி மலைப்பாதை காட்டு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு வழி தெரியாமல் காட்டில் தனியாக சுற்றித்திரிந்து கொண்டிருந்த பாலசுப்ரமணியத்தை பத்திரமாக மீட்டு அடிவாரத்திற்கு அழைத்து வந்தனர். மேலும், அவர் மிகவும் சோர்வாக இருந்த காரணத்தினால் தடாகம் வன பணியாளர்கள் குடியிருப்பில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு பின்னர், வீட்டிற்கு சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Honestly one of the best platforms I have used lately. The game variety is insane and the bonuses are actually helpful. Highly recommend phwwwcasinoplus for anyone who loves action.
The bonuses here are legit and not just bait. I had a great experience with the registration process. Give brafunvip a shot if you are looking for some real action.
The variety of games here is insane. I spent all weekend exploring different slots and won a decent amount. Definitely give 20jilicomlogin a go!
If you love slots, this is the place to be. The graphics are crisp and the hits feel genuine. I’m having a blast on 62phslot lately.