இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு…

கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் கடந்த 25ம் தேதி அக்னிவீர் ஆட்சேர்ப்பு துவங்கியது. அடுத்த மாதம் 7ம் தேதி வரை ஆள் சேர்ப்பு பணி நடத்தப்படும்.

ஆன்லைன் பொதுநுழைவுத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் அக்னிவீர் கிளார்க், அக்னிவீர் பொதுப்பணிப்பிரிவு (அனைத்து ஆயுதப்பிரிவுகள்), அக்னிவீர் தொழில்நுட்பப்பிரிவு (அனைத்து ஆயுதப்பிரிவுகள்) அக்னிவீர் டிரேட்ஸ்மேன் 10ஆம் வகுப்பு தேர்ச்சி (அனைத்து ஆயுதப்பிரிவு), அக்னிவீர் டிரேட்ஸ்மேன் 8ம் வகுப்பு தேர்ச்சி (வரவுஸ்கீப்பர் மற்றும் மெஸ்கீப்பர்) அனைத்து ஆயுதப்பிரிவு மற்றும்

மகளிர் இராணுவ காவல்படை ஆகிய பிரிவுகளில் சேர்ப்பதற்காக தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.com இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்புப் பேரணி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அசல் ஆவணங்களையும் தவறாமல் கொண்டுவர வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்கள், விண்ணப்பிக்கும்போது பதிவு செய்த மின்னஞ்சல் முகவரியைத் தொடர்ந்து சரிபார்த்து, ஆட்சேர்ப்புப் பேரணி தொடர்பான அறிவிப்புகள் மற்றும் புதுப்பிப்புகளைத் தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை தானியங்கி முறையிலும், நியாயமான மற்றும் வெளிப்படையான முறையிலும் நடைபெறுகிறது. எனவே, இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

2 thoughts on “இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *