கொசு அதிகரிப்பு கட்டட உரிமையாளருக்கு அபராதம்…

கோவை மாநகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுகாதார குழு அதிகாரிகள் குடியிருப்பு பகுதிகள் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து, நீர் தேங்க கூடிய டிரம்கள், டயர்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள் அப்புறப்படுத்த அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், டெங்கு கொசு புழு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறங்களை வைத்திருந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிக்குட்பட்ட துடியலூர் விசிஎஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று மாநகராட்சி சுகாதார குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகி இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கட்டிட உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் ரூ. 75 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

2 thoughts on “கொசு அதிகரிப்பு கட்டட உரிமையாளருக்கு அபராதம்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *